என் ஆசை நிறைவேறாவிட்டால் இறந்தும் ஆவியாக வருவேன்! குஷ்புவை மிரட்டிய மாமியார்
“இறந்த பின்னும் உன்னை நான் சுற்றி வருவேன்” என நடிகை குஷ்புவை அவரின் மாமியார் மிரட்டியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக அடிப்பட்டு வருகின்றது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் 80-90-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் தற்போது திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து சமிபக்காலமாக நடிகை குஷ்புவின் மகள் பற்றியும் அவரின் ஆடைகள் பற்றி சர்ச்சைகள் எழுந்தன. மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை குஷ்புவின் மாமியார் சந்தித்துள்ளார்.
இது போன்ற சில விடயங்கள் மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து குடும்பம், சினிமா என இருக்காமல் அரசியலிலும் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
அந்த வகையில், பாஜகவில் கட்சியில் “தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினர்“ ஆக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமிபத்தில் பேட்டியொன்றில் கலந்து கொண்ட போது அவரின் மாமியார் குறித்து சில விடயங்களை பகிர்ந்துள்ளார்.
மாமியாரின் ஆசை தான் இது
அதில்,“ என்னுடைய மாமியாருக்கு சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை மிகவும் பிடிக்கும் அவர் தீவிர ரசிகை என்றும் கூறலாம்.
தோனியின் அனைத்து போட்டிகளையும் ஒன்று விடாமல் பார்த்து விடுவார். தோனியில்லையென்றால் அந்த போட்டியை அவர் பார்க்க மாட்டார்.
கடந்த காலங்களில் தோனியை பார்க்க வேண்டும் என விருப்பபட்டார். லாக்டவுன் உள்ளிட்ட பல பிரச்சனைகளினால் பார்க்க முடியாமல் இருந்தது. அவருக்கு தற்போது 88 வயது. அவர் இறந்து விட்டால் மீண்டும் வருவேன் எனக் கூறினார்.
இதனை தொடர்ந்து தான் தோனியை வரவழைத்து அவருக்கு சப்ரைஸ் கொடுத்தேன். தோனியை பார்த்த பின்னர் உள்ளே அழைத்து சென்றது, தோனிக்கு முத்தம் கொடுத்து எல்லாம் மகிழ்ச்சியாக பேசினார்.
தோனி,“ நீங்க எல்லா போட்டிகளையும பாருங்க..” எனக் கூறினார். அதற்கு மாமியார், “ நீங்க விளையாடினால் நான் எல்லா போட்டிகளையும் பார்ப்பேன்.” எனக் கூறியுள்ளார். ” என குஷ்பு பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “ தோனிக்கு இப்படியொரு ரசிகையா?” என தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.