அச்சு அசல் குஷ்புவாக மாறிய மூத்த மகள்: கொஞ்சும் அழகில் எப்படி மாறியிருக்கிறார் தெரியுமா?
குஷ்புவின் மூத்தமகளான அவந்திகா ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
நடிகை குஷ்பு
90களில் தமிழ் சினிமாவில் தன் ஆட்சியை கொடி கட்டி பறக்க விட்டவர் தான் குஷ்பு. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.
தனது அம்சமான முகத்தால் அனைவரையும் கவர்ந்தவர் தான் இவர். மேலும் இவருக்காக கோயில் கட்டும் அளவிற்கு இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது. குஷ்பு சுந்தர் சி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு அவந்திகா, அனந்திகா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் மூன்று தலைமுறையாக நடித்துக் கொண்டிருக்கிறார், நடிப்பில் மட்டும் அல்ல, தொழில் முனைவர், தயாரிப்பாளர், சின்னத்திரை நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட குஷ்பு அரசியலையும் விட்டு வைக்காமல் அந்தப் பக்கமும் சென்று இருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு அதிக உடல் எடையைக் கொண்டிருந்த குஷ்பு தற்போது உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய குஷ்புவாக இன்னும் அழகாக மாறிவிட்டார்.
குஷ்புவின் மூத்த மகள்
குஷ்புவின் மகள்கான அவந்திகா, அனந்திகா இருவரும் குஷ்புவை விட அழகாகவும் உயரமாகவும் வளர்ந்து இருந்தார்கள்.
இவர்களின் குடும்ப புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தை அழகுப்படுத்தியிருந்த நிலையில் மூத்த மகளான அவந்திகா குஷ்புவை மிஞ்சும் அழகியாக சில புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.
இதனைப்பார்த்த இணையவாசிகள் அடுத்த வாரிசு நடிகை ரெடி எனவும், இவர் குஷ்புவின் இடத்தைப் பிடித்து விடுவார் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |