குஷ்புவின் காதலர் யார் தெரியுமா? இணையத்தில் கசிந்த புகைப்படங்கள்
பிரபல நடிகை குஷ்பு காதலிக்கும் காலத்தில் அவருடைய காதலருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
குஷ்பூவிற்கு கோயில் கட்டினார்களா?
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் தான் நடிகை குஷ்பு.
சினிமா வரலாற்றில் முதன்முறையாக ஒரு நடிகைக்கு கோயில் கட்டினார்கள் என்றால் அது நம்ம சின்னதம்பி குஷ்புவிற்கு தான்.
இவர் சினிமாவில் இருக்கும் போது அவரை கொண்டாட ரசிகர்களே இல்லை. தர்மத்தின் தலைவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த குஷ்பு, இன்று சினிமா, அரசியல், குடும்பம் என அனைத்திலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
காதலிக்கும் போது எடுக்கப்பட்ட சுவாரஸ்ய புகைப்படங்கள்
இந்த நிலையில் இவர் சுந்தர் சியை காதலிக்கும் போது ஆரம்பத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை அவருடைய கல்யாண நாள் ஸ்பெஷலாக இணையத்தில் வைரலாக்கியுள்ளார். இந்த புகைப்படங்களில் அவருடைய இரண்டு பெண்களை சேர்த்து பகிர்ந்துள்ளார்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் காதல் தான் வாழ்க்கை என்பதை நடிகை குஷ்பு அவர்கள் இந்த உலகிற்கு எடுத்து காட்டியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
Our life in 4 pics. From then to now, nothing has changed. Thank you for always being with me. To love, to fight, to chide, to reprimand, above all to understand me & love me just as I am. To accept me for what I am. Happy 23rd anniversary.Being married to you is a blessing. ❤️ pic.twitter.com/hGXDBan2j1
— KhushbuSundar (@khushsundar) March 8, 2023