என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்!
தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை குஷ்பு. இவர் இயக்குனர் மற்றும் நடிகருமான சுந்தர் சி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு, இரண்டு மகள்களும் உள்ளனர்.
அதில் இளைய மகளான அவந்திகா உடல் எடை அதிகரித்து இருந்த நிலையில் தற்போது இளைத்து ஆச்சரியப்படுத்தினார். அப்போது அவர் எதிர்கொண்ட கேலி கிண்டல்கள் பற்றி யூடியூப் தளம் ஒன்றிற்கு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், நானும் என் அக்காவும் சினிமாவில் ஆர்வமுடைய குழந்தைகளாகவே இருக்கிறோம். அக்கா நடிப்பில் ஆர்வம் அதிகம். அதனால் தான் லண்டனில் படிப்பை தொடர்ந்து வருகிறார்.
எனக்கு தயாரிப்பில் ஆர்வம் அதிகம். அம்மா, அப்பா இரண்டு பேருமே சினிமாவில் வருவதற்கு முழு ஆதரவு கொடுத்து இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய பிரபலத்தை பயன்படுத்தி எதுவும் செய்ய மாட்டோம்.
உங்கள் திறமையை கொண்டு உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் எனக்கூறினார். மேலும், நெப்போட்டிசம் தொடர்பான கேள்விக்கு, பிரபலங்களின் குழந்தைகள் என்பதால் எங்களுக்கு சினிமாவில் நுழைவதற்கான வழி எளிதாக கிடைக்கிறது என்பது உண்மை தான்.
ஆனால், உள்ளே வந்த பிறகு அந்த பிரபல தன்மை உபயோகப்படுத்தி நாங்கள் ஒன்றிரண்டு படங்கள் தயாரிக்கலாம். ஆனால். அதுவும் வெற்றி பெற்றால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும்.
உடல் எடையை குறித்த கேள்விக்கு, நான் என்னுடைய சிறு வயதில் உடல் எடை அதிகரித்து இருந்தேன். அதை ஒரு போதும் குறையாக என் வீட்டில் யாரும் சொன்னதில்லை. ஏனெனில் எங்கள் குடும்பத்தில் ஜீன் அப்படிதான்.
ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் சமூக வலைதளங்களில் நான் கேலிகளை எதிர்கொள்ள ஆரம்பித்தது மன அழுத்தத்தில் கொண்டு போய்விட்டது.
அந்த கோபம் என் அம்மா மீது திரும்பியது. மேலும் எனக்கே தனிப்பட்ட முறையில் உடல் எடை குறைத்தாக வேண்டும் என்று தோன்றியதால், உணவு கட்டுப்பா,டு உடற்பயிற்சியென இப்போது உடல் எடை குறைத்து இருக்கிறேன் என பேசியுள்ளார்.