அதுக்கு நீயா பணம் கொடுத்த...அசிங்கமா இருக்கு! வெளுத்து வாங்கிய குஷ்பு
பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டீர்களா என கேட்ட ஒரு பெண்ணுக்கு நடிகை குஷ்பு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
குண்டாக இருந்த நடிகை குஷ்பு தனது உடல் எடையைக் குறைப்பதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார்.
குஷ்பூ உடல் எடையைக் குறைத்து ஒல்லியான புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருகிறார்.
குஷ்பூ சமீபத்தில் கோல்டன் நிறத்தில் இருக்கும் மாடர்ன் உடை அணிந்து புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த ரேகா என்பவர், அழகாகத்தான் இருக்கிறீர்கள்.
ஆனால், ஏன் பிளாஸ்டிக் சர்ஜரி மற்றும் தோல் திருத்தங்களை செய்ய வேண்டும்? உங்களுடைய நல்ல தோற்றத்துடனே நீங்கள் வயதாகலாம் என பதிவிட்டிருந்தார்.
இந்த கம்மெண்ட்டால் கோபம் அடைநெத குஷ்பு செம டோஸ் விட்டு பதிலடி கொடுத்துள்ளார்.
வெளுத்து வாங்கிய குஷ்பு
நடிகை குஷ்பூ அளித்த பதிலில், “நீங்க தான் அதுக்கு காசு கொடுத்தீங்களா மை டியர்? மத்தவங்கள துன்புறுத்தி கிடைக்கும் சந்தோஷத்தில் உங்களுக்கு என்ன கிடைக்குதுனு தெரியல.
உன்னை நினைச்சா அவமானமா இருக்கு என்று செம டோஸ் விட்டுள்ளார்.
நடிகை குஷ்பூவின் இந்த பதிவுகு ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரித்து வருவதால் லைக்குகள் குவிந்து வருகிறது.
