இட்லி, தோசைக்கு கும்பகோணம் கடப்பா நாவூறும் சுவையில் எப்படி செய்யலாம்?
வீட்டில் அதிகமாக காலை உணவு செய்வதென்றால் அதில் கண்டிப்பாக இட்லி தோசை இருக்கும். இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.
ஆனால் இந்த பதிவில் கும்பகோணம் கடப்பா இதற்கு பொருத்தமாக இருக்கும். இதை நீங்கள் இட்லி தோசைக்கு மட்டுமல்ல அனைத்து உணவிற்கும் வைத்து சாப்பிலாம். மிகவும் அருமையான சுவையை கொடுக்கும்.
இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 2
- பாசிப்பயறு - 120 கிராம்
- மஞ்சள் - 1தேக்கரண்டி
- உப்பு - 1தேக்கரண்டி
- தேங்காய் - 1 கப்
- பொட்டுக்கடலை - 2 தேக்கரண்டி
- சோம்பு - 1 தேக்கரண்டி
- இஞ்சி - 1 துண்டு
- பூண்டு - 6 பல்
- எண்ணெய் - 1 தேக்கரண்டி
- பட்டை
- கிராம்பு
- ஏலக்காய்
- அன்னாசி பூ
- வெங்காயம் - 2
- கறிவேப்பிலை
- தக்காளி - 2
- உப்பு - 1தேக்கரண்டி
- கொத்தமல்லி தளிர்
செய்யும் முறை
முதலில் பாசி பருப்பையும் உருளைக்கிழங்கையும் சேர்த்து அவிக்க வேண்டும். இதில் மஞ்சள் உப்பு போன்றவற்றை சேர்க்க வேண்டும். இதை மூடி 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
பின்னர் இதை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்க வேண்டும். பின்னர் ஒரு மிக்ஸியில் தேங்காய் உப்பு கசகசா சோம்பு பூண்டு இஞ்சி பச்ச மிளகாய் போன்றவற்றை போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஆறிய உருளைக்கிழங்கை தோல் உரித்து எடுக்க வேண்டும். இதன் பின்னர் இன்னுமொரு பெரிய பாத்திரத்தில் பிரியாணி இலை பட்டை கிராம்பு சோம்பு அன்னாசி பூ போன்றவற்றை வறுக்க வேண்டும்.
இதன் பின்னர் இதனுடன் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். இதன் பின்னர் தக்காளியை சேர்க்க வேண்டும். தக்காளி வதங்கியதும் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இதன் பின் வேக வைத்த பாசிப்பருப்பை இதனுடன் சேர்க்க வேண்டும். இது கிரேவி பருவத்திற்கு வருவதற்காக நன்றாக அரை கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். இதன் பின்னர் இதை 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
இதன் பின்னர் இதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து விட வேண்டும். இறுதியாக கொத்தமல்லி இலையை மேலால் போட்டு சூடான இட்லி மேல் ஊற்றி பரிமாறினால் சாப்பிடுபவர்கள் மனநிறைவடைவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |