ஒரே ஒரு படம் தான் நடித்தேன்... இவ்வளவு வன்மம் ஏன்? KPY பாலா வெளியிட்ட காணொளி!
ஒரே ஒரு படம் தான் நடித்தேன், அதற்கே இப்படி பண்ணுவாங்க என எனக்கு சத்தியமாக தெரியாது" என வருத்தப்பட்டு சர்ச்சை கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், KPY பாலா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகிவருகின்றது.
KPY பாலா
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் தான் நடிகர் KPY பாலா. அவர் தனது திறமையால், இப்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக களமிறங்கி காந்தி கண்ணாடி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இந்த திரைப்படம் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இவர் மீது பல சர்ச்சை கருத்துக்களும் இணையத்தில் வைரலானது.
காரணம் சினிமாவில் தான் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ஆனால், பாலா வெளிநாட்டு கைக்கூலி, அவர் கொடுத்த எல்லா ஆம்புலன்ஸும் போலியானவை, அவைகளுக்கு எல்லாம் இன்சூரன்ஸ் என்பது கிடையாது என குறிப்பிட்டு சிலர் பாலாவை கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.
அதனால் மனமுடைந்த பாலா, "நான் செய்த உதவியால் எத்தனை பேர் வாழ்கிறார்கள் ஏன் பாசிட்டிவ் விஷயங்கள் பற்றி யாருமே பேசுவது இல்லை. அந்த ஆம்புலன்சில் இருக்கும் நம்பர் பிளேட்டில் ஒரு D எக்ஸ்ட்ராவாக ஒட்டிவிட்டார்கள், அதை வைத்து கொண்டு எவ்ளோ பன்றாங்களே...
பாலா 'Exposed, முகத்திரை கிழிந்தது' என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் சர்வதேச கைக்கூலி என ஒருவர் சொல்லியிருக்கின்றார். நான் தினகூலி.
நான் சொந்தமாக சம்பாதிப்பதை மட்டும் தான் உதவியாக செய்கிறேன். எனக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வரவில்லை. இதுவே நான் அடுக்குமாடி வீடு, சொகுசு கார் என வாங்கி இருந்தால் இப்படி பிரச்சனை வந்து இருக்காது.
இந்த பிரச்சனை முடிவது போல தெரியவில்லை. அதனால் தான் இந்த வீடியோவை வெளியிடுகிறேன் என குறிப்பிட்டு KPY பாலா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |