kothamalli-chutney: கையேந்தி பவன் மல்லி சட்னி செய்வது எப்படி?
பொதுவாக வீடுகளில் காலையுணவாக இட்லி அல்லது தோசை செய்வார்கள். இது இந்தியர்களின் பாரம்பரிய உணவு முறையாகும்.
இப்படி தினமும் இட்லி அல்லது தோசை செய்யும் பொழுது சிலர் சாப்பிட விரும்ப மாட்டார்கள். அப்படியானவர்களுக்கு விதவிதமாக சட்னி அல்லது குழம்பு செய்து கொடுக்கலாம்.
அப்படியாயின், வீட்டில் கொத்தமல்லி அதிகமாக உள்ளது என்றால் கொத்தமல்லி சட்னி செய்யலாம்.
அந்த வகையில், கையேந்தி பவன் ஸ்டைலில் மல்லி சட்னி எப்படி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பூண்டு 10 பல்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - சிறிய துண்டு
* கொத்தமல்லி - 1/2 கட்டு
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1/4 வாசி
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 1
சட்னி அரைப்பது எப்படி?
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் கொஞ்சமாக ஊற்ற வேண்டும். அதில் உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.
அதன் பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதங்க விட்டு அதனுடன் பெருங்காயத் தூள், கொத்தமல்லி, புளி ஆகியவற்றை கலந்து விட்டு, பொட்டுக்கடலை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
இந்த கலவையை இறக்கி, சூடு ஆறியதும் மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும். அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்புக்கு தேவையான பொருட்களை போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால் சுவையான கையேந்தி பவன் கொத்தமல்லி சட்னி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |