வீட்டில் தோசை மிகுதியாகிவிட்டதா? அப்போ இந்த முட்டை கொத்து தோசை செய்ங்க
பெரும்பாலான வீடுகளில் இரவு காலை உணவாக செய்வது தோசை தான். நாம் வீட்டில் செய்த ஒரே உணவை சாப்பிட்டு சாப்பிட்டு வெறுத்திருப்போம். கடைகளில் கொத்து சாப்பிடுவதற்கு மிகவும் பிடித்திருக்கும்.
ஆனால் அது அரோக்கியம் இல்லாத காரணத்தால் சாப்பிட யோசிப்போம். பொதுவாக கடைகளில் புரோட்டாவை வைத்து தான் கொத்து செய்வார்கள். ஆனால் இதை தோசை வைத்தும் செய்யலாம்.
புரோட்டாவைப் போலவே நாம் தோசையையும் கொத்து தோசையாக சாப்பிடலாம். இதை எப்படி செய்ய வேண்டும் இதற்கான ரெசிபி என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
- முட்டை - 2
- ஊத்தாப்ப தோசை - 3
- குருமா - 5 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- கரம் மசாலா - அரை ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை சிறிது சிறிதாக நாறுக்கிக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் சேர்த்து நறுக்கி வைத்த வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளி நன்கு வதங்கிய பின் இரண்டு முட்டையை உடைத்து அதில் சேர்த்து நன்கு வதக்கவும். முட்டை நன்றாக வதங்கிய பின்னர் சிறிதளவு உப்பு கரம் மசாலா சேர்த்து கலந்து விடவும். இதன் பின்னர் எடுத்து வைத்திருக்கும் ஊத்தாப்பத்தை சிறு சிறு துண்டுகளாக பிய்த்து அதில் சேர்க்கவும்.
ஊத்தாப்பத்தை சேர்த்த பின் குருமாவையும் சேர்த்துக் கொள்ளவும். இப்பொழுது குருமா மற்றும் ஊத்தாப்பம் இரண்டையும் சேர்த்து தோசை கரண்டி வைத்து நன்றாக கொத்தி கொத்தி விடவும்.
இரண்டும் நன்றாக கலந்து பின் இந்த கலவை நன்கு வெந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் முட்டை கொத்து தோசை தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். காலை இரவு உணவாக இதை செய்து கொடுத்து பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |