கொரிய பெண்கள் அழகாகவும் இளமையாகவும் இருக்க இந்த உணவுகள் தான் காரணமா?
கொரிய பெண்களும் ஆண்களும் வயது அதிகமானாலும் பளபளப்பான சருமத்துடன் இருப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது. இதற்குக் காரணம் அதிக விலை க்ரீம்களோ அல்லது பெரிய பராமரிப்பு முறைகளோ இல்லை.
அதற்கு முக்கிய காரணம் அவர்கள் சாப்பிடும் உணவுகள் தான். கொரியர்கள் ஆரோக்கியமான பழங்கால உணவு பழக்கங்களை இன்னும் பின்பற்றி வருகிறார்கள்.
இவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு சருமத்திற்கு இயற்கையான பொலிவை தருகின்றன. அந்த உணவுகள் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
முக்கிய உணவுகள்
கடற்பாசி (மியோக்) கடற்பாசி கவர்ச்சியாகத் தெரியாது. ஆனால் இதில் அயோடின், கால்சியம், வைட்டமின் A மற்றும் C போன்ற சத்துகள் அதிகம் உள்ளன.
இது தைராய்டு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. கொரியர்கள் மியோக்-குக் என்ற சூப்பை பிறந்தநாள் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு சாப்பிடுவது பாரம்பரியம்.
கிம்சி (Kimchi) கிம்சி என்பது புளித்த முட்டைக்கோஸ் அல்லது முள்ளங்கியால் செய்யப்படும் உணவு. இதில் உள்ள புரோபயாட்டிக்ஸ் குடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முகப்பரு, வீக்கம் குறைய உதவுகிறது. கொரியர்கள் இதை அரிசி, நூடுல்ஸ் போன்ற உணவுகளுடன் சாப்பிடுகிறார்கள்.
கிரீன் டீ (Green Tea) கிரீன் டீ ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்தது. இது சருமத்தை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்கிறது. கொரியர்கள் காபிக்கு பதிலாக கிரீன் டீ குடிப்பது வழக்கம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு சர்க்கரைவள்ளியில் உள்ள பீட்டா கரோட்டின் உடலில் வைட்டமின் A ஆக மாறி சரும பொலிவை அதிகரிக்கிறது. மேலும், இது பசியை கட்டுப்படுத்தி, உடல் எடையையும் சரிசெய்கிறது.
டோஃபு (Tofu) டோஃபு புரதம் நிறைந்த உணவு. இதில் உள்ள ஐசோஃப்ளேவோன்கள் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தி கொலாஜனை அதிகரிக்கிறது. இதனால் சருமம் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |