படுத்த உடனே தூக்கம் வர வேண்டுமா? தலையணைக்கு அடியில் இந்த இலையை வைங்க
இரவில் நிம்மதியான தூக்கத்தை பெறுவதற்கு தலையணைக்கு அடியில் சில பொருட்களை வைத்தால் நல்ல பலன் கிடைக்குமாம்.
ஏன் தூக்கம் முக்கியம்?
நமது ஆரோக்கியத்திற்கு தூக்கம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒரு நாளில் 3ல் ஒரு பங்கை தூங்குவதற்கு பயன்படுத்துகின்றது.
தூக்கம் என்பது வெறும் ஓய்வு மட்டுமல்ல. இது உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கான நேரம். தூங்கும்போது, நமது செல்கள் புதுப்பிக்கப்பட்டு, உடல் இளமையாக இருக்க உதவுகிறது.
புற்றுநோய் செல்கள் உருவாவதையும், பெருகுவதையும் தடுப்பதில் தூக்கம் முக்கிய பங்கு வகிப்பதுடன், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி நோய்களிலிருந்தும் பாதுகாக்கின்றது.
நாம் தூக்கத்தின் போது உற்பத்தி செய்யப்படும் மெலடோனின் ஹார்மோன், இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் உணர வைத்து, சருமத்தைப் பளபளப்பாக்கி, நோய்களைத் தடுக்க உதவுகிறது.
தூக்க பிரச்சனை
பெரும்பாலான மனிதர்கள் பல்வேறு தூக்க பிரச்சனையால் அவதிப்படுகின்றனர். இவற்றிக்கான காரணத்தையும், பொதுவாக தூக்கக்கோளாறையும் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
பெரும்பாலும் மன அழுத்தம் மற்றும் அதிகமாக சிந்தனை செய்பவர்களுக்கு தூங்குவதில் சிரமம் ஏற்படுகின்றது.
நள்ளிரவில் விழிப்பதும் தூக்க பிரச்சனையை ஏற்படுத்தும்.இது ஹார்மோன் சமநிலையின்மை அல்லது ரத்த சர்க்கரை அளவில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், சர்க்கரை அளவு குறையும்போது, உடல் எதிர்வினையாற்றி உங்களை எழுப்பக்கூடும்.
அதிகாலையில் விழிப்பது, காலையில் செய்ய வேண்டிய வேலைகள், பணிகள் குறித்த கவலை அல்லது பதற்றம் காரணமாக இது நிகழலாம்.
போதுமான தூக்கத்திற்கு பின்பும் சோர்வாக உள்ளதற்கான காரணம் என்னவெனில், ஆழமற்ற தூக்கம், நாசி பலிப்ஸ், சைனசிடிஸ், ஆஸ்துமா, தைராய்டு பிரச்சனை மற்றும் வைட்டமின் டி குறைபாடு போன்ற இருக்கலாம்.
எளிய தீர்வுகள் என்ன?
இரவு 7 அல்லது 8 மணியளவில் கசகசா மற்றும் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூளை பாலுடன் கலந்து குடித்தால் தூக்க பிரச்சனை வராது.
பாதங்களை தேங்காய் எண்ணெய்யால் மசாஜ் செய்தால், நரம்புகளைத் தணித்து, தளர்வைத் தருவதுடன், நல்ல தூக்கத்தையும் பெறலாம்.
நடு இரவில் விழிப்பவர்கள், சர்க்கரை அளவை நிலைப்படுத்த, வாழைப்பழம் அல்லது கொய்யா, பிஸ்கட் போன்றவற்றை சாப்பிடலாம்.
அதிகாலையில் விழிப்பவர்களுக்கு, பதற்றத்தை குறைக்க, சுமார் 10 முறை ஆழமான சுவாசப் பயிற்சிகளை செய்யலாம்.
தூக்கத்திற்குப் பிறகும் சோர்வாக உணர்வர்களுக்கு, உடலின் சர்க்காடியன் தாளத்தை ஒழுங்குபடுத்த, மாலையில் லேசான உடற்பயிற்சி அல்லது சூரிய ஒளியில் நடப்பது நல்லது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க மாலையில் புதினா தேநீர் அல்லது துளசி தேநீர் குடிக்கலாம்.
உங்கள் தலையணையின் கீழ் மருதாணி பூக்கள் அல்லது துளசி இலைகளை வைக்கலாம். அவற்றின் நறுமணம் அமைதியைத் தரும்.
படுக்கைக்கு செல்லும் முன், அமைதியான மனதுடன், இனிமையான இசை அல்லது கதைகளைக் கேட்டு தூங்குவதற்குத் தயாராகுங்கள். மொபைல் போன் மற்றும் திரைகளைத் தவிர்ப்பது நல்லது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
