தங்கத்தை விட அதிக விலைக்கு விற்பனையாகும் உப்பு.. எவ்வளவு தெரியுமா?
“உப்பில்லா பண்டம் குப்பையிலே..” என்ற பழமொழி உள்ளது.
உப்பு நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாக உள்ளது. சர்க்கரை இல்லாமல் கூட சாப்பிட முடியும். ஆனால் உப்பு இல்லாமல் சாப்பிடுவது என்பது கடினமான விடயம்.
அனைத்து நாடுகளிலும் வழக்கமான உப்பு மலிவான விலையில் கிடைத்தாலும், நம்பமுடியாத விலையில் விற்கப்படும் சில அரிய வகை உப்புகளும் உள்ளன.
அத்தகைய ஒரு ஆடம்பரமான மசாலாப் பொருள் தான் “கொரியன் மூங்கில் உப்பு”. இந்த உப்பு மூங்கில் உப்பு, ஊதா மூங்கில் உப்பு அல்லது ஜுகியோம் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இதன் விலை இதன் விலை 250 கிராமுக்கு $100 (ரூ. 8,811) அல்லது ஒரு கிலோவுக்கு ரூ. 400 டாலராகும்.
இந்திய மதிப்பிற்கு சுமாராக 35,246 ரூபாய்க்கும் இலங்கை ரூபாயில் ரூ. 120, 841.20 -க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
அந்த வகையில், கொரியன் மூங்கில் உப்பு ஏன் இவ்வளவு விலைக்கப்படுகின்றது. அப்படி என்ன அதில் இருக்கிறது என்பதனை தெரிந்து கொள்ள பலரும் ஆவலுடன் இருப்பீர்கள். இதனை நாம் தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
கொரிய மூங்கில் உப்பு தயாரிப்பு முறை
ஜுகியோம் அல்லது கொரிய மூங்கிலை பயன்படுத்தி இந்த உப்பு தயாரிக்கப்படுகிறது. வழக்கமான கடல் உப்பு மூங்கில் டப்பாக்களில் அடைத்து மஞ்சள் களிமண்ணால் மூடப்பட்டு பதப்படுத்தபடுகிறது.
அதன் பின்னர் உப்பு கட்டிகள் கெட்டியானதும், வெளியில் எடுத்து நசுக்கப்படுகிறது. மற்றொரு மூங்கில் தண்டில் நிரப்பப்பட்டு, மீண்டும் சுடப்படும்.
இந்த செயன்முறை தொடர்ந்து ஒன்பது முறை நடக்கும். பேக்கிங் சுழற்சியில் 1000 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையில் செய்யப்படுகிறது.
அதிக விலைக்கு விற்பனையாவது ஏன்?
கொரிய உணவு வகைகளுக்கு இந்த உப்பு பாரம்பரிய கொரிய மருத்துவத்தில் முக்கிய பொருட்களில் ஒன்றாக உள்ளது. கடல் உப்பை ஒரு தடிமனான மூங்கில் தண்டில் அடைத்து, பைன் விறகுகளை பயன்படுத்தி வெப்பமாக்கப்படுகிறது. ஒன்பது முறை வெப்பமாக்கிய பின்னர் உப்பு தயாராகிறது.
சிறப்புக்கள்
1. பேக்கிங் செயன்முறை முடிந்தவுடன் மூங்கில் உப்பில் நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு படிகங்கள் ஆகிய நிறங்களில் பிரியும். இந்த செயன்முறையின் போது மூங்கில் சுவையை குறித்த உப்பு உறிஞ்சுவதால் காம்ரோஜங் சுவை எனப்படும் தனித்துவமான இனிப்பை கொண்டிருக்கும்.
2. நன்றாக சுடப்பட்ட மூங்கில் உப்பு, "ஊதா மூங்கில் உப்பு" என அழைக்கப்படுகிறது. இது 1,500 °C க்கும் அதிகமான வெப்பநிலையில் தயார் செய்யப்படுகிறது.
3. இந்த வகை கொரிய மூங்கில் உப்பு உலகிலேயே அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
4. ஜூகியோம் அல்லது ஊதா மூங்கில் உப்பு என அழைக்கப்படும் இந்த அரிய வகை உப்பானது சுமாராக $400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. குறித்த உப்பை தயார் செய்ய கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் சரி ஆகும். இதனால் கொரிய உணவு வகைகளிலும், பாரம்பரிய மருத்துவத்திலும் சேர்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
