chicken fry: கொங்குநாடு பாணியில் அசத்தல் சிக்கன் வறுவல்... எப்படி செய்வது?
பொதுவாக தமிழ்நாட்டில் செட்டிநாடு பாரம்பரிய சமையலை போன்று கொங்குநாடு ரெசிபிக்களும் உலகளவில் பிரபலமானவை.
அதற்கு முக்கிய காரணம் அவர்களின் தனித்துவமான மசாலா தான். ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலானவர்கள் சற்று வித்தியாசமாகவும் சுவையாகவும் சாப்பிட வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
அப்படி வீட்டில் இந்த வார இறுதியில் வித்தியாசமான ஒரு சிக்கன் ரெசிபியை செய்ய வேண்டும் என நினைத்தால், இந்த கொங்குநாடு சிக்கன் வறுவலை எவ்வாறு எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - அரை கிலோ
இடித்த பூண்டு - 10 பல்
வர மிளகாய் - 10
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சின்ன வெங்காயம் 25
இஞ்சி பூண்டு விழுது 2 தே.கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
தக்காளி - 1
நல்லெண்ணெய் - 1 தே.கரண்டி
சோம்பு - கால் தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
மசாலா அரைக்க தேவையானவை
வரக்கொத்தமல்லி- 2 தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
சீரகம் - அரை தே.கரண்டி
சோம்பு - அரை தே.கரண்டி
இலவங்கப்பட்டை - 1
கிராம்பு - 4
இலவங்கம் - சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் வரக்கொத்தமல்லி, மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து ஆறவிட வேண்டும்.
அவை ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அதில் அரை ஸ்பூன் சோம்பு ,இடித்த பூண்டு ,வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரையில் நன்றாக வதக்கி, அதனுடன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வலையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றையும் சேர்த்து மென்மையாக வதக்கி, மஞ்சள் மற்றும் சிக்கன் சேர்த்து நன்றாக வதங்கவிட வேண்டும்.
சிக்கன் பாதியளவு வெந்ததும், அரைத்து வைத்துள்ள மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் வரையில் மூடி வேகவைக்க வேண்டும்.
இறுதியில் கொத்தமல்லி இலையை தூவி இறக்கினால் அருமையான சுவையில் கொங்கு ஸ்பெஷல் சிக்கன் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |