63 வயதில் கணவர் மணிரத்னத்திடம் திட்டு வாங்கும் சுஹாசினி... மேடையில் உண்மையை உடைத்த தாய்
நடிகை சுஹாசினியின் தாய் முதன்முதலாவது மேடை ஏறி தனது மகளைக் குறித்து பல விடயங்களைக் கூறியுள்ளார்.
நடிகை சுஹாசினி
தமிழ் சினிமாவில் துளியும் கவர்ச்சி காட்டாமல், ஜெயித்த ஹீரோயின்களில் ஒருவர் தான் சுஹாசினி. உலக நாயகன் குடும்பத்திலிருந்து நடிக்க வந்த சுஹாசினி இவர் 1980-களில் முன்னணி ஹீரோயினாக இருந்தார். ரஜினிகாந்த், சத்யராஜ், உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ஹீரோயினாக இருக்கும் போதே, கதை மற்றும் டயலாக் ரைட்டிங்கில் அதிக ஆர்வம் காட்டிய சுஹாசினி, மணிரத்னம் இயக்கிய படங்களில் பணியாற்றிய போது அவரை காதலிக்க துவங்கினார்.
இந்த காதல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்திலும் முடிந்தது. அதன்படி, கடந்த 1988-ம் ஆண்டு இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்ட சுஹாசினி தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்த தம்பதிக்கு, தற்போது நந்தன் என்கிற மகனும் உள்ளார். சுஹாசினி மற்றும் மணிரத்னம் இருவருமே திரையுலகை சேர்ந்தவர்கள் என்றாலும், இவர்களுடைய மகன் நந்தன் திரையுலகின் வெளிச்சம் படாமல் ஒதுங்கியே உள்ளார்.
தற்போது குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும் சுஹாசினி தனது அம்மாவை முதன்முதலாக மேடைக்கு அழைத்து வந்துள்ளார்.
சுஹாசினியின் தாயார் தனது மகளைக் குறித்த பல விடயங்களை மேடையில் கூறி பெருமையடைந்துள்ளார். இதுகுறித்த காணொளியினை விரிவாக கீழே காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |