உடல் எடையை குறைக்கும் கொள்ளு கேரட் துவையல்! பத்தே நிமிடத்தில் செய்து அசத்தலாம்
பொதுவாக வீடுகளில் அதிகமாக காலையுணவாக தோசை, இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகள் தான் செய்வார்கள்.
ஆனால் இதற்கு வழமையாக சாம்பார் மற்றும் சட்னி தொட்டுக் கொள்ள வைத்திருப்பார்கள். இதனை தவிர்த்து வேறு வகையான கறிகள் அல்லது துவையல் எடுத்துக் கொண்டால் வீடுகளில் காலையுணவிற்கு எல்லோரும் வந்து விடுவார்கள்.
அந்த வகையில் காலையுணவிற்கு சூப்பரான காம்பினேஷன் கொடுக்கும் கொள்ளு கேரட் துவையல் எவ்வாறு செய்வது என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
கேரட் துருவல் - 1 கப்
கொள்ளு - 30 கிராம்
வெங்காயம் - 1
பூண்டு - 4 பல்
காய்ந்த மிளகாய் -10
உளுந்தம் பருப்பு - 1கைப்பிடி
கடலைப் பருப்பு - 1 கைப்பிடி
கடுகு, கறிவேப்பிலை
உப்பு - தேவையான அளவு
தயாரிப்பு முறை
முதலில் துவையலுக்கு தேவையானளவு வெங்காயத்தை எடுத்து நன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவேண்டும்.
இதன் பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து , அது நன்றாக சூடாகியதும் வாணலியில் கொஞ்சமாக எண்ணெய் அல்லது நெய் விட்டு வெங்காயம், கேரட் துருவல், பூண்டு என்பவற்றை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும்.
வதங்கியதும் அதனை தனியாக எடுத்து வைத்து விட்டு அதே வாணலியில் மிளகாய் வற்றல், கொள்ளு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு ஆகிய பொருட்களை தனித்தனியாக போட்டு வறுத்துக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து வறுத்தெடுத்த கலவை, வதக்கிய கலவை மற்றும் உப்பு, புளி தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த துவையலை தனியாக எடுத்து, வாணலியில் எடுத்து அதில் கொஞ்சமாக எண்ணெய் அல்லது நெய் விட்டு கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து துவையலில் கலந்துக் கொள்ளவும்.
தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த கேரட் துவையல் தயார்!