Kollu Sadam: ஆரோக்கியமான கொள்ளு சாதம் இப்படி செய்தால் சுவை பிரமாதம்!
தினமும் நாம் விதவிதமான உணவுகளை செய்வோம். ஆனால் ஆரோக்கியமான உணவு செய்கிறோமா என கேட்டல் அது கேள்வியாக இருக்கும். இதற்கு ஒரு பதில் உணவாகத்தான் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது கொள்ளு சாதம்.
உடல் இளைக்க வேண்டும் என விரும்புவார்கள் தினமும் உணவில் கொள்ளினை சேர்த்து வந்தால் விரைவில் நல்ல மாற்றம் காண முடியும். கொள்ளில் அதிக அளவு உடலிற்கு தேவையான புரத சத்து நிறைந்துள்ளது.
இதனை தினமும் உண்டு வந்தால் தசைகளின் வலிமை அதிகரிக்கும். தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறியும் மேலும் உங்களுக்கு கட்டுடல் கிடைக்கும். இவ்வளவு பயன் கிடைக்கும் கொள்ளில் எப்படி கொள்ளு சாதம் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்- 1தேக்கரண்டி
- நெய் - 1 ஸ்பூன்
- கடலை பருப்பு -1 ஸ்பூன்
- கடுகு -1 ஸ்பூன்
- சீரகம் -1 ஸ்பூன்
- வெங்காயம் - 2
- பூண்டு -10 பல்
- பச்ச மிகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- மஞ்சள் - 1 ஸ்பூன்
- மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
- சீரக பொடி - 1 ஸ்பூன்
- தனியா பொடி - 1 ஸ்பூன்
- தக்காளி - 3
- கொள்ளு -1 கப்
- கறிவேப்பிலை
- கொத்தமல்லி
- அரிசி - 2 கப்
செய்யும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் நெ்யும் கொஞ்சம் ஊற்ற வேண்டும். பின்னர் கடலை பருப்பு கடுகு சீரகம் வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும். பின்னர் வெங்காயம் சேர்க்க வேண்டும்.
இதனுடன் பூண்டு பச்ச மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். இதன் பின்னர் உப்பு மஞ்சள் மிளகாய் பொடி சீரக பொடி தனியா பொடி தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் ஊறவைத்த கொள்ளு சேர்க்க வேண்டும் இதனுடன் மூன்று கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.
இதை ஐந்து நிமிடங்கள் கொதிக்க விட்டு அரிசியை சேர்த்து 20 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான கொள்ளு சாதம் தயார்.கொள்ளு மிகவும் சத்தானது இயற்கையாகவே கொள்ளுக்கு இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு.
இதில் நிறைந்துள்ள அதிக அளவு நார்ச்சத்து உங்களின் இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும். மலசிக்கல் பிரச்சினை ஏற்பட முக்கிய காரணமாக அமைவது நார்ச்சத்து குறைபாடு ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |