"எப்போது கல்யாணம்?" – த்ரிஷாவின் பதில் இதுதான்!
தற்போது 43 வயதை கடந்த நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே ரசிகர்களின் நீண்டநாள் ஆசை.
ஆனால் திருமணம் குறித்து த்ரிஷாவின் பார்வை சற்று வித்தியாசமானது. இது குறித்து முன்னைய பேட்டியொன்றில் த்ரிஷா வெளிப்படைய பேசிய விடயம் இணையதத்தில் தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

திருமணம் பற்றிய த்ரிஷாவின் கருத்து
நடிகை குஷ்பு மகள் திருமணத்தில் அசத்தல் அலங்காரத்துடன் பங்கேற்ற புகைப்படங்களை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அடுத்தது உங்களின் திருமணம் தான் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு நடிகை த்ரிஷா முன்பே கொடுத்துள்ள விளக்கம் தற்போது இணையத்தில் மீண்டும் வைரலாகியுள்ளது.

த்ரிஷா குறிப்பிடுகையில், "திருமணத்தின் மீது எனக்கு தனிப்பட்ட நம்பிக்கை இல்லை. நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி. வெறும் கட்டாயத்திற்காக திருமணம் செய்யக் கூடாது," என்று அவர் முன்பே கூறியுள்ளார்.
டேட்டிங் என்பது வெறும் வெளியே செல்வது அல்ல; ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்துகொள்ளும் உறவாக இருக்க வேண்டும் என்பதும் அவரது கருத்து.

அதேபோல், திருமணம் செய்தால் கடைசி வரை அந்த உறவை காப்பாற்ற வேண்டும் என்பதால், விவாகரத்திலும் எனக்கு விரும்பபம் இல்லை. "திருமணத்திற்கு முன் 100 முறை யோசிப்பேன்.யாருடைய மனதையும் காயப்படுத்த விரும்பவில்லை," என தெரிவித்துள்ளார்.

காதலைப் பற்றி பேசும்போது, "காதல் இல்லாமல் பலர் சேர்ந்து வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட வாழ்க்கை எனக்கு வேண்டாம். முதலில் காதல், அதன் பிறகுதான் திருமணம்.என் வாழ்க்கைத் துணையை இன்னும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்," என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்ற உறவு, சினிமாவை விட்டு விலக வேண்டும் என்ற நிபந்தனையால் முறிந்தது.மேலும், ராணா டகுபாட்டியுடன் காதல் வதந்திகளும் ஒரு காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியமையும், தற்போது த்ரிஷா - முதல்வர் விஜய் குறித்த சர்ச்சைகள் இணையத்தில் வலம் வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |