தங்கம் மோதிரத்தை எந்த விரலில் அணியக்கூடாது? வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் அதிகமாகுமாம்
தங்கம் மோதிரம் எந்த விரலில் அணிவது சிறந்தது? எந்த விரலில் அணிந்தால் துரதிர்ஷ்டம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தங்கம்
உலகின் மிகவும் விலையுயர்ந்த உலோகங்களில் ஒன்றாக இருக்கும் தங்கம், இந்த மதத்தில் ஒரு புனிதமாகவும், மங்களகரமானதாகவும் பார்க்கப்படுகின்றது.
இவை மதிப்புமிக்க உலோகமாக காணப்பட்டாலும், செழிப்பு, செல்வம் மற்றும் நல்வாய்ப்பின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றது.
தங்கத்தினை நகையாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அணிந்து வருகின்றனர். அதிலும் மோதிரம் என்பது மிகவும் முக்கியமான அணிகலனாக இருக்கின்றது.
மோதிரத்தினை கூட நாம் எந்தவிரலில் அணிய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகின்றது. ஏனெனில் விரல்கள் வெவ்வேறு கிரகங்களுடன் தொடர்புடையதாக இருப்பதால், இவை வாழ்க்கையிலும் சில தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகின்றது.
ஆகவே மோதிரத்தை எந்தவிரலில் அணியக்கூடாது? எந்த விரலில் அணியலாம்? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஆள்காட்டி விரல்
ஜோதிடத்தில் தங்கம் சூரியன் மற்றும் குருவின் தொடர்புடையதாக காணப்படுகின்றது. ஆகவே ஜோதிடர்கள் ஆள்காட்டி விரல் குருவுடன் இணைக்கப்பட்டுள்ளதால் இதில் தங்க மோதிரத்தினை அணியலாம்.
மேலும் இவை வியாழனின் நேர்மறையான செல்வாக்கை வலுப்படுத்துவதுடன், கல்வி, நற்பெயர், தொழில், திருமணம் தொடர்பான நன்மைகளை கொடுக்கின்றது. ஜாதகத்தில் குருபகவான் பலவீனமாக இருப்பவர்கள் இந்த விரலில் அணிவது நல்லது.

மோதிர விரல்
மோதிர விரல் கிரகங்களின் ராஜாவான சூரியனுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகின்றது. தங்க மோதிரத்தை அணிவது தன்னம்பிக்கையை அதிகரிப்பதுடன், சமூக அந்தஸ்து, வேலையில் அங்கீகாரம் கிடைப்பதாக நம்பப்படுகின்றது.
மேலும் மோதிர விரலில் மோதிரம் அணிவதால், தந்தையுடனான உறவுகளை வலுப்படுத்துவதாகவும், அரசாங்க சேவையில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

எந்த நாளில் அணியலாம்?
ஞாயிறு மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் தங்க மோதிரம் அணிவதற்கு சிறந்த நாளாக இருக்கின்றது. ஞாயிறு சூரியனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று வியாழன் குருவுடன் தொடர்புடையது. மேலும் இந்த விரலில் மாணிக்கம், மஞ்சள் நீலக்கல் வைத்து மோதிரம் அணிந்தால், அதற்கான சடங்குகளை பின்பற்ற வேண்டுமாம்.
எந்த விரலில் அணியக்கூடாது?
நடுவிரல் சனி பகவானுடன் தொடர்புடையது. தங்கம் சூரியனுடன் இணைக்கப்படுவதால், சூரியனுக்கு, சனிக்கும் பகை இருப்பதாக நம்பப்படுகின்றது.
ஆகவே நடுவிரலில் மோதிரம் அணிவதை தவிர்க்கவும். அவ்வாறு அணிவதால் எதிர்மறையான சூழல் உருவாவதுடன், வேலையில் தாமதம், பொருளாதார சிக்கல், எதிர்பாராத செலவு, மன உளைச்சல் ஏற்படுமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |