சரிந்து விழுந்து உயிரிழந்த பிரபல பாடகர்....கேகே உயிரை பறித்தது எது தெரியுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்
இந்தியாவின் பிரபல பாடகரான கேகே என்கிற கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று இரவு திடீரென உயிரிழந்த சம்பவம் இசை ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவருக்கு வயது 53.
கொல்கத்தாவில் அவர் ஒரு concertல் பாடிக்கொண்டிருக்கும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ஹிந்தியில் பிரபல பாடகர் மற்றும் இசை அமைப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார் குன்னத், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில், எக்கச்சக்க பாடல்களையும் பாடி உள்ளார்.
அது மட்டுமில்லாமல், அவரது பாடலை ரசிப்பதற்கென்றே ரசிகர் கூட்டமும் அதிகம் உள்ளது.
சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, தன்னுடைய பாடலால் மக்களை கட்டிப் போட்டு வந்த கேகே திடீரென உயிரிழந்துள்ளார்.
உயிரை பறித்த மாரடைப்பு
கொல்கத்தா பகுதியில் இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருந்த போது திடீரென மேடையிலே சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அவரை சேர்த்த போது, பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது ரசிகர்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.