பாடகர் கே கே-யின் கடைசி நிமிட காட்சி! உயிர் பிரியும் முன்பு நடந்தது என்ன?
பிரபல பாலிவுட் பாடகர் கேகே நேற்று இரவு திடீர் மாரடைப்பினால் உயிரிழந்தையடுத்து, அவர் கடைசியாக அசௌகரித்தை உணர்ந்து மருத்துவமனைக்கு சென்ற காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
பாடகர் கே கே
பிரபல பாலிவுட் பாடகர் கேகே(53) செவ்வாய்க்கிழமை இரவு கொல்கத்தாவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர் நேற்று இரவு தெற்கு கொல்கத்தாவில் உள்ள நஸ்ருல் மஞ்சாவில் ஒரு கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த கச்சேரியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பாடியுள்ளார்.
அப்போது திடீரென அசௌகரியமாக உணர்ந்த கேகே தனது மைக்கை அருகில் உள்ளவரிடம் கொடுத்துவிட்டு மேடையின் பின்பக்கமாக கைத்தாங்கலாக அழைத்து செல்லப்படுகிறார்.
பின்னர் ஹோட்டலுக்கு சென்ற அவர் மாடிப்படிகளில் மயக்கமுற்று விழுந்ததையடுத்து கொல்கத்தா CMRI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
The very moment when #KK felt uneasy and was taken to CMRI hospital, #Kolkata. He was declared brought dead.
— Madhuri Rao (@madhuriadnal) June 1, 2022
He performed the show and ended it.#RIP #KK Not KK pic.twitter.com/WFOHKdCqFn
தற்போது அவரின் மரணத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆம், கே.கே-வின் மரணம் இறக்கைக்கு மாறானது என கொல்கத்தா போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அவரின் உடல் இன்று பிரேத பரிசோதனையும் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
जिंदगी का आखरी पल कभी भी आ सकता है।
— Rajan Rai (@RajanRa05092776) June 1, 2022
This was the moment when #KK felt a health issue during the live show and his staff took him back to the hotel.#KKPassesAway #KKLIVE @ActorMadhavan @LakshmiManchu @AdnanSamiLive @ParineetiChopra @SunielVShetty @RandeepHooda @abhijitmajumder pic.twitter.com/u1IzO2MStb