சமையலறை சமாளிப்புகள்: சமைப்பதில் தவறு செய்து விட்டீர்களா? இந்த டிப்ஸ் போதும்
சமையலறையில் சமையலில் நமக்கு தெரியாமல் நடக்கும் சமையல் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சமையலறை சமாளிப்புகள்
இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாகிவிட்டால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் அரைத்து மாவில் கலந்து விட வேண்டும். இப்படி செய்தால் உளுந்து போட்டதை போல இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.
சமைக்கும் போது உருளைக்கிழங்கு அதிகமாக வேகி மாவு போல வெந்து விட்டால் அதை தடுக்க பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் - சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.
சப்பாத்திக் மாவு பிசையும் போது "சொத சொத'வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டடால் கவலையே வேண்டாம். அந்த மாவை அப்படியே ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக மாற்றலாம்.
கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். இது சாம்பாரில் இருக்கும் அதிகமான உப்பின் சுவை குறைந்துவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |