sunday special: நாவூரும் சுவையில் மட்டன் வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே பெரும்பாலானவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், நாவுக்கு ருசியாக சமைத்து சாப்பிட வேண்டும் என ஆசைப்படுவவார்கள்.
வார நாட்களில் தொடர்ந்து வேலை பார்கப்பவர்களுக்கு ஏதாவது வித்தியாசமாக செய்து கொடுக்க வேண்டும் என இல்லத்தரசிகளும் சிந்திப்பது வழக்கம்.
அப்படி இந்த ஞாயிற்றுக்கிழைமையை இன்னும் சிறப்பாக்க அசத்தல் சுவையில் மட்டன் வறுவல் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மட்டன் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 தே.கரண்டி
உப்பு - 1 தே.கரண்டி
தண்ணீர் - 1 டம்ளர்
வதக்கி அரைப்பதற்கு
எண்ணெய் - 3 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
சோம்பு - 1தே.கரண்டி
பட்டை - 1 துண்டு
ஏலக்காய் - 1
கிராம்பு - 2
சின்ன வெங்காயம் - 6-7
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
முந்திரி - 7 தாளிப்பதற்கு
எண்ணெய் - 2 தே.கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி
கரம் மசாலா - 1தே.கரண்டி
மிளகாய் தூள் - 2தே.கரண்டி
மல்லித் தூள் - 2 தே.கரண்டி
தண்ணீர் - சிறிது
உப்பு - சுவைக்கேற்ப
மிளகுத் தூள் - 1/2 தே.கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
முதலில் மட்டனை நன்றாக கழுவி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள மட்டனை சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து மட்டனில் இருந்து நீர் வெளிவரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் ஒரு ட்மளர் தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி 10 விசில் விட்டு இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கிய பின்னர் தக்காளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கிவிட்டு அதனுடன் முந்திரியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி குளிரவிட வேண்டும்.
அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, மென்மையாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் குறைந்த தீயில் வைத்து மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து சில நிமிடம் வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் அதில் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சிறிது தண்ணீரை அதில் ஊற்றி கிளறி, வேக வைத்துள்ள மட்டனை நீருடன் அப்படியே ஊற்றி கிளறி, ஓரளவு நீர் வற்றும் வரையில் நன்கு வேகவிட வேண்டும்.
பின்னர் நீர் வற்றியதும், அதில் மிளகுத் தூள் சேர்த்து கிளறிவிட்டு கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான மட்டன் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |