இன்சுலின் அளவை சீராக்கி சுகர் லெவலை கட்டுப்படுத்த வேண்டுமா? இந்த மசாலாக்களை எடுத்துக்கோங்க
நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் அளவை சீராக்கி, சர்க்கரை அளவை கட்டுப்படுத்து சில மசாலாக்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
இன்றைய காலத்தில் நீரிழிவு நோய் என்பது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதித்து வருகின்றது.
உடலில் இன்சுலின் சரியாக பயன்படுத்தப்படாத போது ரத்த சர்க்கரை அளவு உயர தொடங்குகின்றது. மேலும் இன்சுலின் சரியாக சுரக்காத நிலையில், ரத்த சர்க்கரை அளவு குறைந்து விடுகின்றது... இதனால் நீரிழிவு நோய் ஏற்படுகின்றது.
ஆரோக்கியமான டயட் மற்றும் வாழ்க்கை முறை இவற்றினால் நீரிழிவு நோயினை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். நீரிழிவு நோயாளிகள் சில சத்தான உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரகம், கண்பார்வை பாதிக்கப்படும் ஆபத்து அதிகம். அதோடு, இதய நோய் அபாயமும் அதிகரிக்கும். அந்த வகையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் மசாலா பொருட்களை குறித்து தெரிந்து கொள்வோம்.
இன்சுலின் அளவை சீராக்கும் மசாலா பொருட்கள்
கொத்தமல்லி விதை என்னும் தனியா விதைகள் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகின்றது. இதிலுள்ள கார்போஹைட்ரேட் உடலின் மெட்டபாலிசம் மற்றும் ரத்த சர்க்கரை குறைப்பு செயல்முறையை மேம்படுத்துகின்றது. காலை உணவின் போது ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிது தனியா பொடி சேர்த்து கொதிக்க வைத்த நீரை அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்ட மஞ்சளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து காலையில் குடித்தல் நல்ல பலன் கிடைக்கும். இரவில் பாலுடன் கலந்து கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.
சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், இன்சுலின் அளவை தூண்டவும் இலவங்கப்பட்டை பயன்படுகின்றது. இதனால் டைப் 2 சர்க்கரை நோயின் அபாயத்தை தவிர்க்க முடியுகின்றது. இலவங்கபட்டை சேர்த்து கொதிக்க வைத்த நீரை வெறும் வயிற்றில் அருந்துவது பலன் தரும்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கு வெந்தயம் மிகச்சிறந்த அருமருந்தாகும். இரவில் ஊற வைத்து காலையில் இதனை தண்ணீருடன் குடிக்கவும்.
Image Credit: kostrez / Shutterstock.com
இன்சுலின் உற்பத்தியை தூண்டும் தன்மை பிரிஞ்சி இலைக்கு உண்டு. பிரிஞ்சி இலை இன்சுலின் அளவை சீராக்கி, ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கின்றது.
இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீஷியம், நார்ச்சத்து கொண்ட இஞ்சி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இன்சுலின் அளவை சீராக்கி சுகர் லெவலை கட்டுக்குள் வைக்கவும் உதவுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |