Mustard Chutney: ஹோட்டல் சுவையில் கடுகு சட்னி எவ்வாறு செய்வது? வெறும் 10 நிமிடம் போதும்
நாம் தாளிப்பதற்கு பயன்படடுத்தப்படும் கடுகில் சட்னி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக இட்லி, தோசை என்றாலே அதற்கு விதவிதமான சட்னி செய்து சாப்பிடுவதை மக்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் பலரும் அறிந்திடாத கடுகு சட்னி எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். அதிலும் ஹோட்டல் சுவையில் வைப்பதை குறித்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கடுகு - 1 டீஸ்பூன்
உளுந்து - 3 டீஸ்பூன்
பூண்டு - 2 பல்
வரமிளகாய் - 1
தக்காளி - 2 (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
முதல் வாணலி ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடானதும் 1 டீஸ்பூன் கடுகு மற்றும் 3 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு இவற்றினை சேர்த்து நன்கு பொரிய விடவும்.
பின்பு அதில் 2 பூண்டு பற்களைத் தட்டிப்போட்டு, வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் தக்காளியையும் சேர்த்து, சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
பின்பு வதக்கிய கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்து, ஒரு கிண்ணத்தில் போட்டு, தாளிக்காமல் அப்படியே பரிமாறினால், சுவையான கடுகு சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |