தப்பி தவறிக் கூட அரிசியை இப்படி வைக்காதீங்க! ஆபத்து நிச்சயம்
பொதுவாக வீட்டில் வைத்திருக்கும் தானியங்களில் காற்று உட்போகாமல் பாதுகாத்து கொள்வது அவசியம்.
காற்று உட்புறம் செல்ல ஆரம்பித்து விட்டால் அதில் கிருமிகளின் ஆதிக்கம் அதிகரித்து விடும்.
இதனால் பங்கசு படிதல், துர்நாற்றம், மஞ்சள் நிறத்திற்கு மாறுதல், கட்டி போன்ற அமைப்பில் புழுக்கள் தோன்றுதல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.
மேலும் காற்று மட்டுமல்ல நீருடன் இருக்கும் கைகளில் அந்த தானியங்களை தொடும் போதும் கிருமிகளின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது.
அந்த வகையில் தானியங்களை கிருமிகளிலிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதனை தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
அரிசி களஞ்சியப்படுத்துவதிலிருக்கும் நுட்பங்கள்
image - Rappler
1. பிரியாணி இலைகள்
தானியங்கள் போட்டு வைத்திருக்கும் பாத்திரங்களில் இரண்டு பிரியாணி இலையை போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது தானியங்கள் பழுதடைவதை தடுக்க முடியும். மேலும் தானியங்களில் ஏற்படும் பங்கசு படிமத்தையும் தடுக்க முடியும்.
2. கிராம்பு
கிராம்பு பொதுவாக ஒரு தொற்றுநீக்கியாக செயற்படுகிறது. இதனால் பயமின்றி அரிசி, பருப்பு களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் போத்தல்கள் அல்லது பாத்திரங்களில் கிராம்புகளை போட்டு வைப்பது அவசியமாகும். இவ்வாறு செய்வதால் கிருமிகளின் இனப்பெருக்கத்தை தடுக்க முடியும்.
3.குளிர்சாதன பெட்டி
தானியங்களை குளிர்சாதன பெட்டியில் களஞ்சியப்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானதொன்று. ஆனால் இதனை பெரியதாக யாரும் பின்பற்றுவது இல்லை. மேலும் அரிசிகளை வெப்பநிலை உட்போகும் படி வைத்திருந்தால் அது காலப்போக்கில் கிருமிகளை வளர செய்து விடுகிறது.
image - backdoor Survival
4. பூண்டு
தானியங்கள் வைத்திருக்கும் பாத்திரங்களில் புதிதாக இருக்கும் பூண்டுகளை தோல் நீக்காமல் மேலாக போட்டு வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பங்கசு பரவுதலில் இருந்து இலகுவாக தப்பித்து கொள்ள முடியும்.
5. சூரிய ஒளி
இது தான் கிருமிகள் பரவுதலில் முக்கிய இடத்தை பிடிக்கிறது. கிருமிகளின் வளர்ச்சிக்கு மற்றைய காரணிகள் அனைத்தும் இருந்து சூரிய ஒளி பட்டால் மாத்திரம் போது கிருமிகள் வளர ஆரம்பித்து விடும்.
இதனால் களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் தானியங்களை முதலில் சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க வேண்டும்.