தினமும் ஒரு பிரியாணி இலையை வீட்டுக்குள் எரித்தால் என்னென்ன பிரச்சினைகள் தீரும்... இவ்வளவு நல்லது இருக்கா?
இந்தியாவில் பிரபலமான உணவான பிரியாணியிலும் மேலும் பல அசைவ உணவுகளிலும் பயன்படுத்தப்படுவதால் இந்த இலை பிரியாணி இலை என அழைக்கப்படுகிறது.
பொதுவாக இந்த இலை வாசனைக்காக தான் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது அற்புதமான மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது.
இந்த பிரியாணி இலைகள் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதனால் மருத்துவ குணங்கள் காரணமாகவும் இவை பல இடங்களில் வளர்க்கப்படுகின்றன.
இந்த பிரியாணி இலைகளை எரிப்பதன் மூலம் உடலுக்கு சில நன்மைகள் கிடைக்கின்றன. இப்போது அந்த இலைகளை எப்படி எரிப்பது என்று பலருக்கு சந்தேகம் இருக்கும்.
சில பிரியாணி இலைகளை சாம்பலில் போடவும். இப்போது அதில் இருந்து வரும் புகையை முகரவும். இவ்வாறு 10 நிமிடங்கள் வரை செய்யலாம். மேலும் நேரடியாக இந்த இலையை சாப்பிடுவதும் பலன் அளிக்கிறது.
இப்படி செய்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்ப்போம்.
நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்கிறது
இந்த பிரியாணி இலைகளை உட்கொள்வதால் உங்கள் சர்க்கரை அளவு குறைந்து இதய ஆரோக்கியத்தில் மேம்பாடு ஏற்படுகிறது. இவை ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்தவை.
மேலும் இவை இன்சுலின் உற்பத்திக்கு உதவுகின்றன. எனவே இரண்டாம் வகை நீரிழிவு நோயை கொண்டவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
பிரியாணி இலையில் உள்ள ருடின் மற்றும் காஃபிக் அமிலம் இதயம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது இதய சுவர்களை வலுப்படுத்துவதன் மூலம் அவை இருதய பிரச்சனைகளை தடுக்கின்றன.
மேலும் மோசமாக இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
பிரியாணி இலைகளில் வைட்டமின் சி நிரம்பி இருப்பதால் இது வலுவான அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. இதில் துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை அதிகமாக உள்ளன.
மேலும் இது உங்கள் கண்கள், மூக்கு, தொண்டை மற்றும் செரிமான அமைப்புக்கு நன்மை பயக்கிறது.
எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி அல்லது செலியாக் போன்ற நோயை கையாள்வதில் இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.