குட்டி பெண்ணைப் பாட வைத்து அழகு பார்க்கும் கிங்ஸிலி.. வைரலாகும் காணொளி
நடிகர் கிங்ஸிலி சிறுமியொருவரை பாட வைத்து அழகு பார்க்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் காமெடி நடிகர்களில் ஒருவர் தான் ரெடின் கிங்ஸ்லி.
இவர் நெல்சன், நயன்தாரா கூட்டணியில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தின் மூலம் கோலிவுட்டிற்குள் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து டாக்டர், அண்ணாத்த, ஜெயிலர், பீஸ்ட் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் இவரும் தற்போது பிரபலமாகிக் கொண்டு வருகிறார்.
இப்படியொரு நிலையில், கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கிங்ஸிலி, சிறுமியொருவர் பாடுவதை ரசித்த காணொளி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.