படுக்கையறைகளில் கண்காணிப்பு கமெரா- கழிப்பறையில் மின்விசிறி: எதிர்நீச்சல் அப்பத்தா
பாத்ரூமில் மின்விசிறி மாட்டி வைத்திருக்கும் எதிர்நீச்சல் அப்பத்தாவின் ஐடியா சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
பாம்பே ஞானம்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் தான் பாம்பே ஞானம்.
இவரின் நடிப்பு தான் எதிர்நீச்சல் சீரியலுக்கு உயிர் கொடுத்தது என்று கூறலாம்.
இவர் கடந்த 1989-ஆம் ஆண்டு “மகாலட்சுமி பெண்கள்” என்ற டிராமா குழுவை துவங்கி அதன் மூலம் நடிக்க ஆரம்பித்தார். இதுவரை 50-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
சீரியல் மட்டுமல்லாது கடந்த 2005-ஆம் ஆண்டு “கலைமாமணி” விருதையும் பெற்றுக் கொண்டார்.
அத்துடன் அவ்வை சண்முகி, ஒரு நாள் ஒரு கனவு, வெயில், அழகிய தமிழ் மகன் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.
ஹோம் டூர்
இந்த நிலையில் கடந்த மாதத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்று பாம்பே ஞானத்தின் வீட்டிற்கு ஹோம் டூர் சென்றுள்ளது.
அப்போது அங்கிருந்த விடயங்கள் தொகுப்பாளர் உட்பட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
குழந்தைகள் வெளிநாட்டில் இருந்தாலும், அவர்கள் வந்து தங்குவதற்கான படுக்கையறை இன்றும் வீட்டில் சுத்தமாக பேணப்பட்டு வருகின்றன.
படுக்கை அறைகளில் ஏன் சிசிடிவி?
மேலும், அனைத்து படுக்கையறைகளிலும் கமெராக்கள் பொருத்தப்பட்டு தினமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு நிறுத்தாமல் படுக்கையறையிலுள்ள கழிப்பறைகளில் பூங்கொத்துக்கள், வாஸ்துப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதனை பார்த்த தொகுப்பாளர், “கழிப்பறையில் இந்த பொருட்களை ஏன் வைத்திருக்கீங்க?” என கேட்ட போது, “அங்கும் நிம்மதி அவசியம்” என பாம்பே ஞானம் பதில் கொடுத்துள்ளார்.
கழிப்பறைகளில் பொருந்தப்பட்டிருந்த மின்விசிறிகள் குறித்து கேட்ட போது, “குளித்த பின்னர் உடம்பு, தலையில் இருக்கும் ஈரம் காய்வதற்காக பொருத்தியுள்ளேன். ” என பதில் கொடுத்துள்ளார்.
இப்படி பாம்பே ஞானம் வியக்க வைக்கும் பல கருத்துக்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |