சிவகார்த்திகேயனால் மனவருத்தத்தில் கிங்காங் மகள்- கடைசி நேரத்தில் நடந்தது என்ன?
திருமணமான கிங்காங் மகள் கொடுத்த பேட்டியில் சிவகார்த்திகேயன் பற்றி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் கிங் காங்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகியவர் தான் நடிகர் கிங் காங்.
இவர், தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
இப்போது திரைத்துறையில் வாய்ப்புகள் குறைந்திருக்கும் சூழலில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அதிசய பிறவி திரைப்படம் இவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதற்கேற்ப மாற்றுத்திறனாளியான கிங்காங் தனது உயரம் குறைவாக இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் தன்னுடைய திறமையால் சாதித்தவர்.
மணப்பெண் உடைத்த உண்மை
இந்த நிலையில், கிங்காங்கிற்கு மொத்தமாக மூன்று குழந்தைகள். அவர்களில் ஒரு மகளான கீர்த்தனாவுக்கு திருமணம் நடத்தி வைக்க ஏற்பாடு செய்தார்.
அதன் பின்னர், தமிழ்நாட்டு திரை பிரபலங்கள் பெரும்பாலானோருக்கு மகளின் திருமண அழைப்பிதழை வைத்தார்.
ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் என அந்த லீஸ்ட் நீண்டது. மேலும் கன்னட நடிகரான சிவராஜ்குமாரையும் நேரில் சந்தித்து பத்திரிகை கொடுத்தார்.
காதல் திருமணம் செய்துகொண்ட கிங்காங் மகள் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகையாம். அவர் வருவார் என பெரிதும் எதிர்ப்பார்க்க கடைசியில் வரவே இல்லை. அது தனக்கு வருத்தம் என கூறியுள்ளார்.
இந்த காணொளியை பார்த்த பலரும் காணொளியை வைரலாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |