உலகில் உள்ள சாக்லேட் நகரங்கள் பற்றி தெரியுமா? வாழ்க்கையில் ஒரு தடவை சரி போங்க
நாள் முழுவதும் வேலைச் செய்து வீடு திரும்புபவர்களுக்கு விடுமுறை நாட்களில் வேறு இடங்கள், நாடுகளுக்கு சென்று மகிழ்ச்சியாக நேரத்தை கழிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
இப்படி சுற்றுலா செல்வது அனைவருக்கும் பிடித்தமான விடயமாகும். அதிலும் குறிப்பாக நம்மிள் பலருக்கும் உலகத்திலுள்ள நாடுகளை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் உலகை சுற்றுவதற்கான போதியளவு பணம் நம்மிடம் இருக்காது.
குறைந்த செலவில் அற்புதமான அனுபவங்களை வழங்கும் ஏராளமான சர்வதேச விடுமுறை இடங்கள் உள்ளன.
எப்படியான பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்பதில் தீர்க்கமான முடிவில் இருக்க வேண்டும்.
மேலும், உலகில் உள்ள சாக்லேட் நகரங்கள் பற்றி தெரிந்து கொண்டால் உங்களுடைய பயணம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
அந்த வகையில், உலகிலுள்ள சாக்லேட் நகரங்கள் என்னென்ன அதிலுள்ள சிறப்புக்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
பிரஸ்ஸல்ஸ் | பிரஸ்ஸல்ஸ் நகரில் 500-க்கும் மேற்பட்ட சாக்லேட் கடைகள் உள்ளன. இங்கு பிரபலமான பிரலைன் சாக்லேட்டுகள் கிடைக்கும். Neuhaus, Godiva, Mary போன்ற கடைகள் அங்கு பிரபலமாக உள்ளன. உணவு பிரியர்களுக்கு இது ஏற்ற இடமாக அமையும். |
துரின் | சாக்லேட் பிரியர்களுக்கு டுரின் ஒரு சொர்க்கம் என சொல்லப்படுகிறது. "கிரெமினோ", ட்ரஃபிள் சாக்லேட் ஆகியன அங்கு பிரபலமாக உள்ளது. அத்துடன் ஹேசல்நட் கொண்டு செய்யப்பட்ட ஜியான்டுஜா எனும் சாக்லேட் உள்ளது. |
வியன்னா | ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவுக்கு சாக்லேட் வரலாறு உள்ளது. சுமாராக 18-ஆம் நூற்றாண்டுலேயே ஹாஸ்பர்க் அரசவையில் சாக்லேட் பிரபலமாக இருந்துள்ளது. அங்கு வருபவர்கள் பல விதமான சாக்லேட்களை வாங்கி சாப்பிட்டதாகவும் வரலாற்று சான்றுகள் உள்ளன. இன்று மக்கள் அங்கு சென்று சாக்லேட் வாங்கி சாப்பிடுகிறார்கள். |
பாரிஸ் | சாக்லேட், பிரான்சு நாட்டுக்கு திருமண பரிசாக வந்துள்ளது. பாரிஸில் உயர் தரமான சாக்லேட் விற்பனை செய்யும் கடைகள் ஏராளமாக உள்ளன. சாக்லேட் மியூசியம் உள்ளது. அங்கு சென்று சாக்லேட் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளலாம். |
ப்ரூஜ் | பெல்ஜியம் நாட்டில் Bruges என்ற அழகான ஊர் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட சாக்லேட் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் புதுவிதமான தயாரிப்புக்களை கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |