ராஜநாகம் Vs ரெடிகுலேடட் மலைப்பாம்பு; திகிலூட்டும் சந்திப்பு நடந்தால் வெற்றி யாருக்கு?
ராஜநாகம் மற்றும் மலைப்பாம்பு மோதலில் எது வெற்றிப் பெறும் என தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்போம். உலகின் மிக நீண்ட விஷப்பாம்புக்கும், மாபெரும் சுருட்டிப் பிடிக்கும் சக்தி கொண்ட பாம்புகளின் உண்மையான ஆற்றல்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் அடர்ந்த காடுகளிலும், வெப்பமண்டல வனப்பகுதிகளிலும் வாழும் பாம்பினங்கள் தான் ராஜநாகம், மலைப்பாம்பு இவைகளுக்கு இடையே சில சமயங்களில் பெரும் மோதல் நடக்கும்.
இதனை பார்க்கும் பொழுது மற்ற ஊர்வனங்கள் கூட அச்சம் கொள்ளுமாம்.
அந்த வகையில், இயற்கை இந்த மோதலை, அறிவியல் மற்றும் சற்று காட்டுத்தனமான கற்பனையுடன் பதிவில் பார்க்கலாம்.
எது நேருக்கு நேர் மோதினால் வெல்லும்?
விஷப் பாம்புகளில் ராஜநாகம் தான் முதலில் இடத்தில் உள்ளது. 18 அடி நீளம் வரை வளரக்கூடிய இது, உலகின் மிக நீண்ட விஷப்பாம்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பாம்பின் வேகமானது மற்ற பாம்பிகளிலும் பார்க்க அதிகமாக இருக்கும்.
இரையை தேடுவதில் பயங்கரமாக கவனம் கொள்ளும். எலிகள் மற்றும் தவளைகளுடன் சாப்பிட்டு திருப்தி அடைவதில்லை என்றால் சிறிய பாம்புகள் முதல் மற்ற இன பாம்புகளையும் வேட்டையாடி உண்ணும்.
ராஜநாகம் பயம் கொள்ளுமா?
ராஜநாகத்திடம் ஒரு யானை படையை வீழ்த்தும் அளவுக்கு சக்தி வாய்ந்த விஷம் உள்ளது. இதன் புத்திசாலித்தனம் மற்றும் தற்காப்பு உணர்வு மற்ற விலங்குகளை அச்சம் கொள்ள செய்யும்.
மற்ற விலங்குகள் இவைகளை அச்சுறுத்தப்படும்போது "நின்று" அதன் படத்தைப் விரிக்கும். அதன் பின்னர், விரைவாகவும் துல்லியமாகவும் தாக்கும்.
மலைப்பாம்பிடம் உள்ள வலிமை
மலைப்பாம்பு முழுவதுமாக தசை வலிமை கொண்டது. இவை பெரும்பாலும் விஷம் பற்றி கவலைக் கொள்ளாது. ஏனெனின் இதற்கு அதே வலிமை உடம்பிலுள்ள தசையில் உள்ளது.
முழு வளர்ச்சியடைந்த ரெடிகுலேடட் மலைப்பாம்பு 23 அடி நீளம் வரை வளரக்கூடியது, இரையை எலும்புகளை நொறுக்கும் அழுத்தத்துடன் சுற்றிக் கொள்ளும். அவை பதுங்கி இருந்து வேட்டையாடும் குணம் கொண்டது.
அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்து சரியான நேரத்தில் தாக்கும். இரையை சுருக்கி மூச்சுத்திணறச் செய்து கொல்லும். உயிரை உண்மையில் பிழிந்து எடுக்கும் ஆற்றல் கொண்டது.
இந்த பாம்பின் தாடைகள் அவற்றின் தலையை விட பெரிய விலங்குகளை விழுங்கும் பொழுது விரிவடையும்.
உதாரணமாக மான்கள், பன்றிகள் மற்றும் முதலைகள் போன்ற விலங்குகளை வேட்டையாடி சாப்பிடும்.
ஆபத்தான சந்திப்பு
இவ்வளவு விஷம் மற்றும் வலிமை கொண்ட பாம்புகள் இரண்டும் சந்திக்கும் பொழுது சண்டையிடும் என ஆவணப்படமொன்று காட்டியுள்ளது.
அதாவது, முதலில் ராஜநாகம் தாக்கி கடித்துவிட்டால், அதன் விஷம் விரைவாக செயல்பட்டு மலைப்பாம்பின் நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்து விடும். அதே சமயம், மலைப்பாம்பு பதுங்கி வந்து ராஜநாகம் கடிப்பதற்கு முன்னர் ராஜநாகத்தை மலைபாம்பு சுற்றிக்கொண்டால் நிலைமை வேகமாக தலைகீழாக மாறலாம்.
பதிவு செய்யப்பட்ட பெரும்பாலான மோதல்களில், ராஜநாகமே அதன் வேகம், விஷம் மற்றும் துல்லியமான தாக்குதல்கள் காரணமாக வெற்றிப் பெற்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |