கிழிந்த ஜீன்ஸ் புள்ளிங்கோ ஹேர் ஸ்டைலாம் வைக்ககூடாது!.. இளசுகளை அதிர விட்ட வடகொரியா அதிபர்!
வடகொரியா அரசு மற்ற நாடுகளை விட வித்தியசமான சட்டங்களை நிறைவேற்றும் நாடாக உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் அவர்களின் வாழ்வியல் முறை என எதுவும் வெளி உலகுக்கு தெரியவே தெரியாது.
அந்தளவிற்கு சர்வாதிகாரத்தனத்துடன் நாட்டை வழிநடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன். இந்த நிலையில், கடந்த நாளில் புதிய சட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.
அதில், கிழிந்த ஜீன்ஸ், இறுக்கமான பேண்ட், பென்சில் பிட் வகையான பேண்டுகளை ஆண், பெண் இருவரும் அணியத் தடை விதிக்கப்படுவதாகவும் அதேபோல் தலைக்கு கலர் டை பயன்படுத்தவும் தடைவிதித்துள்ளார்.
மேலும், வடகொரியாவில் அதிபர் கிம் ஜாங்கால் அனுமதிக்கப்பட்டுள்ள 215 வகையான ஹேச் ஸ்டைல்களில் மட்டுமே வைக்க வேண்டும் இதைத்தாண்டி வேறு வகையான ஹேர் ஸ்டைல் வைத்தால் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்படும் என கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார்.