சிறுநீரக பிரச்சனை இருக்கா? அப்போ இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க!
பொதுவாக தற்போது இருக்கும் நோயாளிகளில் அநேகமானவர்கள் சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நமது உடலில் இருக்கும் முக்கிய பாகங்களில் ஒன்றாக சிறுநீரகம் பார்க்கப்படுகின்றது
. இந்த சிறுநீரகம் மனித உடலில் இரத்தத்தை வடிகட்டுதல், சிறுநீர் மூலம் கழிவுகளை அகற்றுதல், ஹார்மோன்களை உற்பத்தி செய்தல், தாதுக்களை சமநிலைப்படுத்துதல் மற்றும் திரவ சமநிலையை பராமரிப்பது ஆகிய வேலைகளை தினமும் பார்க்கின்றது.
இதனை சரியாக பராமரிக்காவிட்டால் வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
கட்டுப்பாடற்ற நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், குடிப்பழக்கம், இதய நோய் மற்றும் எச்.ஐ.வி தொற்று ஆகிய காரணங்களால் சிறுநீரக பிரச்சினை ஏற்படுகின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.
அந்த வகையில் சிறுநீரக நோயாளிகள் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
1. சோடா பானங்கள்
சோடாக்களில் சர்க்கரையை தவிர்த்து பொட்டாசியம், பாஸ்பரஸ் அதிகமாக சேர்க்கப்படுகின்றது. இதிலுள்ள பாஸ்பரஸ் அதிகமாக உறிஞ்சப்படும் போது இது உடலுள்ள சிறுநீரகத்தை பாதிக்கின்றது.
2. அவகாடோ
பொதுவாக வெண்ணெய் பழங்கள் ஆரோக்கியமானதாக இருந்தாலும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். ஏனெனின் அவகாடோவில் பொட்டாசியம் அதிகம் உள்ளது.
3. பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சூப்கள், காய்கறிகள் மற்றும் பீன்ஸ் போன்ற உணவுகளை எடுத்து கொள்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இது போன்ற உணவுகளில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கின்றது. இது சிறுநீரக நோய் பாதிப்பை ஏற்படுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |