அட்சய திருதியையில் அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 4 ராசி்கள்! எந்த நேரம் தங்கம் வாங்கலாம்?
அட்சய திருதியை என்றால் வளர்க என்று பொருள். அட்சய திருதியை நாளில் செய்யும் செயல் மேன்மேலும் வளரும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.
இன்றைய தினம் கல் உப்பு. மஞ்சள் வாங்கினாலும் தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் இடைக்கும். சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு 3-வது நாள் அட்சய திருதியை 3-ஆம் எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார்.
பொன்னன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, கேந்திரம் அல்லது திரிகோண அந்தஸ்தில் இருந்தால் இவர்களது வீட்டில் தங்கம் இருந்துகொண்டே இருக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் குரு பகவான் சனி, சுக்கிரன், புதன் சாரம் பெற்று இருந்தாலும் தங்கம் வாங்கும் யோகம் அதிகரிக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அட்சய திருதியை நாளில், தானம், தியாகம், துறவு மற்றும் தவம் போன்றவற்றைச் செய்வது குறிப்பாக பலனளிக்கும். இந்த ஆண்டு, அட்சய திருதியை அன்று பஞ்ச மகாயோகம் உருவாகிறது. இந்த நிலை 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் ஏற்றது.
அட்சய திருதியை இவர்களுக்கு மகிழ்ச்சியை பரிசாக தரும். எனவே இந்த ஆண்டு அட்சய திருதியை எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நடிகை சித்ரா தற்கொலை வழக்கு... கணவரின் அதிர்ச்சி புகார்! மீண்டும் சூடுபிடிக்கும் விசாரணை;
ரிஷபம்:
இந்த அட்சய திருதியை ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. தடைப்பட்ட சில வேலைகளை முடிக்க முடியும். நல்ல செய்திகள் வரலாம். புதிய வேலையைத் தொடங்குபவர்களுக்குப் பெரிதும் லாபம் கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நிறைவேறும்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இந்த அட்சய திருதியை சிறப்பான வெற்றியைத் தரும். அதிர்ஷ்டம் ஆதரிக்கும். பதவி உயர்வு-அதிகரிப்பு காணலாம், இது அவர்களின் அனைத்து நிதி சிக்கல்களையும் முடிவுக்கு கொண்டுவரும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த அட்சய திருதியை மிகவும் சிறப்பானது. இதுவரை முடங்கிக் கிடந்த பணிகள் தற்போது விரைந்து முடிக்கப்படும். வாழ்வில் வசதிகள் பெருகும். பணம் பெறுவதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
மகரம்:
இந்த அட்சய திருதியை மகர ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். பழைய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கும்.
அட்சய திருதியை நாள் ஷாப்பிங் செய்வதற்கு மிகவும் ஏற்றது. இது தவிர, இந்த நாள் தானம் செய்வதற்கும் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. எனவே, இன்றைய தினம் ஆடை, உணவு, தண்ணீர் போன்றவற்றை ஏழைகளுக்கு தானமாக வழங்குங்கள்.
அட்சய திருதியையான இன்று நகை வாங்க உகந்த நேரம்
காலை 8 மணி முதல் 9 மணி வரை,
பகல் 11 மணி முதல் மதியம் 12.30 மணி வரை,
மாலை 5 மணி முதல் 6 மணி வரை தங்கம் வாங்கலாம்.