ஆண்களே உஷாரா இருங்க.. சிறுநீர் கழிக்கும் பொழுது ஏன் எரிச்சல் தெரியுமா?
சிறுநீர் கழிக்கும் போது எரிவது போன்ற உணர்வை பெண்களை விட ஆண்கள் அதிகம் அனுபவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பல்வேறு நோய் நிலைமைகளுக்கு முதல் அறிகுறியாக இருக்கும் இந்த எரிவை சிலர் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்.
சிறுநீர் கழிக்கும் பொழுது எரிவு ஏற்படுகிறது, அது நாள் கணக்கில் தொடர்கிறது என்றால் அது குறித்து கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடனடி மருத்துவ கவனிப்பு மற்றும் தகுந்த சிகிச்சை கொடுத்தால் அந்த அசௌகரியத்தில் இருந்து வெளியில் வரலாம்.
அந்த வகையில் சிறுநீர் கழிக்கும் போது எரிவு ஏன் வருகிறது? அதற்கான காரணங்களையும் தொடர்ந்து எமது பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

காரணங்கள்
1. சிறுநீர் வெளியில் வரும் பாதையில் ஏதாவது தொற்றுகள் ஏற்பட்டிருந்தால் அது வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்தும். இதனால் பெண்களை விட ஆண்களே அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.
2. பாலியல் ரீதியாக பரவும் நோய்த் தொற்றுக்களால் இந்த பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. உதாரணமாக கிளமிடியா, கொனோரியா மற்றும் ஹெர்பெஸ் போன்ற நோய்த்தொற்றுகளை கூறலாம்.
3. ஒருவரின் சிறுநீர்ப்பையை பாதிக்கும் ஒரு வகையான UTI, அடிக்கடி எரியும் உணர்வை ஏற்படுத்தி அவரை வலுவிழக்கச் செய்யும்.

4. சிறுநீரகத்தில் உள்ள சிறிய இடத்தில் கனமாக படிவுகள் இருந்தால் அது சிறுநீர் செல்லும் பாதையில் கடுமையான வலியை ஏற்படுத்தி விடும்.
5. பொதுவாக பெண்களுக்கு தொற்றுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கு ஈஸ்ட் தொற்று அல்லது பாக்டீரியா வஜினோசிஸ் போன்ற தொற்றுகள் உள்ளே செல்லும் பொழுது எரிவது போன்று உணரச் செய்யும்.
சிறுநீர் கழிக்கும் போது எரியும் உணர்வு

ஆண்களுக்கு அடிக்கடி இது போன்ற எரிவு அடிக்கடி வரும். இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs, பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் (STIs), சிறுநீர்ப்பை தொற்று மற்றும் சிறுநீர்க்குழாய் ஆகிய பாக்டீரியாக்களின் தாக்கங்கள் காரணமாகவே ஏற்படுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |