உங்கள் சிறுநீரகம் படிப்படியாக செலிழக்கின்றதா? காட்டிக்கொடுக்கும் ஐந்து நிலைகள் இதோ
சிறுநீரக பிரச்சனையின் அறிகுறிகள் பெரும்பாலான நேரங்களில் வெளியே தெரியாமல் இருக்கும் நிலையில், இதனைக் குறித்து தெளிவான தகவலை தெரிந்து கொள்வோம்.
சிறுநீரக பிரச்சனை
நாள்பட்ட சிறுநீரக பிரச்சனை அல்லது CKD இவை நாளடைவில் மோசமான விளைவினை ஏற்படுகின்றது.
சிறுநீரகங்கள் நமது ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கும், உடம்பில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையாக வைக்கவும் செயல்படுகின்றது.
சிறுநீரகங்கள் சரியாக இயங்காவிட்டால் உடலில் கழிவுகள் அதிகமாக தேங்கி பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
இந்நிலையில் சிறுநீரக நோயினை நோயாளிகள் நன்றாக தெரிந்து கொள்ளும் விதமாக இதன் ஒவ்வொரு நிலைகளை தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

சிறுநீரக நோயின் அடுத்தடுத்த நிலைகள்
சிறுநீரகங்கள் நன்றாக இயங்கிகொண்டிருந்தாலும், ஆரம்பகால அறிகுறிகளாக, சிறுநீரில் ரத்தம் அல்லது புரதம் இருப்பதை கண்டறியலாம். இவை சிறுநீரக அழுத்தத்திற்கான எச்சரிக்கை ஆகும். நாம் ரத்த சர்க்கரை அளவினை சரியாக வைப்பது, போதுமான தண்ணீர் குடிப்பது, தேவையற்ற மருந்துகளை எடுத்துக்கொள்வதை தவிர்த்தால் இதனை சரிசெய்ய முடியும்.
இதன் இரண்டாம் நிலையின் அறிகுறிகளும் அரிதாகவே தோன்றும். இவற்றினை ரத்தம் மற்றும் சிறுநீரக பரிசோதனை மூலமாக கண்டறியலாம். இதற்கு நன்மையளிக்கும் பழக்கவழக்கங்களை பின்பற்றினால் இந்த நிலை மோசமாக மாறாமல் பார்த்துக் கொள்ள முடியும். அதிகளவிலான உப்பு சாப்பிடுவதை தவிர்ப்பது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், மதுபானங்கள், புகைப்பழக்கங்கள் இவற்றினை தவிர்த்து, உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.

மூன்றாம் நிலையில் சிறுநீரகத்தின் செயல்பாடு குறைய ஆரம்பிக்கும். இதனால் ரத்தத்தில் உள்ள கழிவுகள் உடம்பில் சேகரிக்க ஆரம்பிப்பதுடன், நமது அன்றாட வேலையினை பாதிப்பது போன்ற அறிகுறிகளும் ஏற்படும். கை மற்றும் கால் வீக்கம், தசை வலி, அடிக்கடி சிறுநீர் கழிப்பது. இவ்வாறான நேரத்தில் அதற்கான மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறுநீரகத்திற்கு அதிக அழுத்தம் கொடுக்காத உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த அளவுலான புரதச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் அடங்கிய உணவினை எடுத்துக் கொள்ளவும்.

நான்காம் நிலையாக, சிறுநீரகத்தில் மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதை, குமட்டல், பசி இழப்பு, அரிப்பு, வீக்கம், தூக்கத்தில் பிரச்சனை இவற்றினை வைத்து தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் சிறுநீரகம் மோசமாகிவிட்டால் ரத்த கழிவுகளை வெளியேற்ற முடியாமல் உடம்பில் தேங்க ஆரம்பித்துவிடுகின்றது. இதற்கு டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுகின்றது.
கடைசியாக ஐந்தாம் நிலையில் சிறுநீரகத்தித்தின் செயல்பாடு 15 சதவீதமாக குறைந்துவிட்டால், உயிர் வாழ்வதற்கு சிரமம் ஏற்படும். இதற்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே முடிவாகும். இவை தீவிரமாகும் போது, சோர்வு, மூச்சுவிடுவதில் சிக்கல், குழப்பம், வீக்கம் போன்றவை காணப்படும். இதற்கான நிரந்தர தீர்வு என்னவெனில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையே ஆகும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |