சிறுநீரக புற்றுநோயாளர்களின் கழுத்தில் தெரியும் அறிகுறிகள்
மனித உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் ஒன்றோடொன்று ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டவையாக இருக்கும். இதனால் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்துவிட்டாலும் அதன் அறிகுறிகள் பல பகுதிகளிலும் இருக்கும்.
அந்த வகையில், கழுத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தைக் கண்டால், அது சிறுநீரகங்களில் உள்ள தீவிர பிரச்சனையின் அறிகுறியாகவும் இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சிறுநீரகங்களில் உள்ள செல்கள் அசாதாரணமாக வளர்ந்து கட்டியை உருவாக்கும் பொழுது தான் “சிறுநீரக புற்றுநோய்” ஏற்படுகிறது.
இப்படி உடலில் வளரும் புற்றுநோய் செல்களானது ஒரு கட்டத்தில் உடலின் பிற உறுப்புகளுக்கு பரவி பாதிப்பை ஏற்படுத்தும்.
உலகளவில் ஏராளமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், உலகளவில் சிறுநீரக புற்றுநோய் 14 ஆவது இடத்தை பிடித்துள்ளது. சிறுநீரக புற்றுநோய் பெரும்பாலும் வயதான ஆண்களுக்கு தான் அதிகமாக ஏற்படும்.
இப்படிப்பட்ட சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகளை என்னென்ன? அதன் பாதிப்புகள் என்னென்ன? என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.
புற்றுநோயின் அறிகுறிகள் ஏன் கழுத்தில் வருகின்றது?
கழுத்துப் பகுதியும், சிறுநீரகங்களும் மிக தொலைவில் இருப்பதால், கழுத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அது சிறுநீரக புற்றுநோயின் அறிகுறி என பலரும் நினைக்கமாட்டோம்.
மாறாக சிறுநீரக புற்றுநோய் இருப்பவரின் கழுத்து பகுதியில் எப்போதும் ஒரு வீக்கம் இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
புற்றுநோய் செல்கள் கழுத்தில் உள்ள நிணநீர் முடிச்சுகளுக்கு பரவும் போது, அவை கழுத்துப் பகுதியில் வீக்கத்தை உருவாக்கும். சிறுநீரக புற்றுநோய் தீவிர நிலையில் இருக்கும் போது கழுத்தில் வீக்கம் வருவது குறைவாக இருக்கும்.
கழுத்துப் பகுதியில் ஏதாவது கட்டி இருப்பது போன்று உணர்ந்தால் அது சிறுநீரக புற்றுநோயின் கட்டிகளாகவும் இருக்கலாம். சிறுநீரக புற்றுநோய் செல்கள் சிறுநீரகங்களில் இருந்து, கழுத்துப் பகுதிகளுக்கு பரவும் வாய்ப்பு உள்ளது.
சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள்
* சிறுநீரில் இரத்தக்கசிவு
* சிறுநீரகங்களில் கட்டி
* பக்கவாட்டு பகுதியில் வலி
* உடல் சோர்வு
* உடல்நிலை சரியில்லாதது போன்ற உணர்வு
* பசியின்மை
* விவரிக்கமுடியாத எடை இழப்பு
* எந்நேரமும் லேசான காய்ச்சல்
* எலும்பு வலி
* உயர் இரத்த அழுத்தம்
* இரத்த சோகை
* உடலில் கால்சியம் அதிகம் இருப்பது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |