தன் படத்தையே கலாய்த்த விக்னேஷ் சிவன் - குலுங்கி குலுங்கி சிரித்த கியாரா அத்வானி!
இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு சமீப காலமாக வெற்றி சற்று தூரமாகவே இருந்து வருகிறது. காதல், நகைச்சுவை, இளைஞர்களை கவரும் விதமான கதைக்களம் என தனக்கென ஒரு பாணியை உருவாக்கியிருந்தாலும், அவரது சமீபத்திய படமான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (LIK) ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
2026-ல் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற ‘Toxic’ பட விழாவில் யாஷ், கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

விக்னேஷ் சிவன் பேசிய வீடியோ வைரல்
விழாவில் பேசிய விக்னேஷ் சிவன், கியாரா அத்வானியைப் பற்றிய பழைய நினைவு ஒன்றை பகிர்ந்துகொண்டார். அப்போது கியாராவை பார்த்து, “எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ‘Kabir Singh’ படத்திற்கு முன்பாகவே உங்களை சந்தித்து ஒரு கதை சொன்னேன்.
அந்தக் கதையை இப்போது நான் படமாக்கிவிட்டேன். அதுதான் ‘Love Insurance Kompany’” என்று கூறினார். அதோடு நிறுத்தாமல், “நீங்க லக்கி... அதில் நீங்க நடிக்கவில்லை!” என்று விக்னேஷ் சிவன் கிண்டலாக கூறினார்.

அதாவது, ஒரு காலத்தில் கியாராவிடம் சொன்ன கதையை பல ஆண்டுகளுக்குப் பிறகு படமாக்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். ஆனால் அந்தப் படத்தில் கியாரா நடிக்காததை வைத்து, மேடையிலேயே தனது சொந்தப் படத்தைப் பற்றியே அவர் ஜாலியாக கலாய்த்துக்கொண்டது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொதுவாக ஒரு இயக்குநர் தனது படத்தை மேடையில் புகழ்ந்து பேசுவார். ஆனால் விக்னேஷ் சிவனோ, “நல்ல வேளை நீங்க நடிக்கல...” என்று சொல்லி தனது படத்தையே ட்ரோல் செய்திருப்பதுதான் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

குறிப்பாக, தனது படத்தின் வரவேற்பு குறித்து வரும் விமர்சனங்களையும் தாண்டி, தன்னையே கிண்டல் செய்துகொள்ளும் அளவுக்கு விக்னேஷ் சிவன் இந்த விஷயத்தை மிகவும் கேஷுவலாக எடுத்துக்கொண்டிருப்பது ரசிகர்களையும் சிரிக்க வைத்துள்ளதுடன் அவரின் செயல் பலரையும் வியக்க வைத்துள்ளது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் படு வைராலாகி வருகின்றது.
— Laxmi Kanth (@iammoviebuff005) August 24, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |