ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை
Drug users killed 4 of a Family in rangpur: பங்களாதேஷில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகொலை
பங்களாதேஷின் ரங்பூர் நகரில் இந்து குடும்பத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் உட்பட அவரது குடும்பத்தினர் 4 பேரை உள்ளூர் இளைஞர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணபதி சக்கரவர்த்தி(65) என்ற நபரின் வீட்டின் மேல் போதைப்பொருள் பயன்படுத்தியதை தட்டிக்கேட்டதற்காக கணபதி சக்கரவர்த்தி, அவரது மனைவி மற்றும் 2 பிள்ளைகளை இளைஞர்கள் கொலை செய்துள்ளனர்.
மச்சுவபாரா பகுதியில் உள்ள இரண்டு மாடி விட்டில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த பயங்கர சம்பவத்தை தொடர்ந்து பூட்டியிருந்த வீட்டிற்குள் இருந்த கணபதி சக்கரவர்த்தி(65), அவரது மனைவி பிரீதிலதா சக்கரவர்த்தி(50), மகள் ஆகாமி சக்கரவர்த்தி(23), மற்றும் மகன் பிரியாம்(12) ஆகிய 4 பேரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளது.
ஆதாரங்களை கலைப்பதற்காக கொல்லப்பட்டவர்களின் முகங்கள் எரியக்கூடிய திரவத்தை ஊற்றி சிதைக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்தினரின் செல்போன்கள் டிடர்ஜென்ட் கலந்த தண்ணீரில் அழிக்கப்பட்டுள்ளது.
இரண்டு இளைஞர்கள் கைது
இந்த சம்பவத்தில் தற்போது சித்தார்த்தா தாஸ்(19), முக்தா தாஸ்(23) என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக ரங்பூர் பெருநகர் காவல் ஆணையர் முகமது அப்துல் மபுத் தெரிவித்துள்ளார்.
இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும், அவர்கள் வீட்டிலிருந்து திருடிய தங்க நகைகள் மீட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கொலையாளிகள் இருவரும் கொலை செய்த பிறகு அந்த வீட்டிலேயே இரவு முழுவதும் தங்கியுள்ளனர். வீட்டின் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பேரீச்சைபழம் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை சாப்பிட்டு விட்டு போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |