என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை!

Tamil Cinema jason sanjay Tamil Actors C Joseph Vijay
By Vinoja Aug 23, 2026 05:21 AM GMT
Report

jason sanjay : முதலமைச்சர் விஜயின் மகனான ஜேசன் சஞ்சய் சமீபத்தில் அளித்த பேட்டியில்,  தான் மேற்கொண்ட ஒரு ஆபத்தான பயணம் குறித்த தகவலை மிகவும் சாதாரணமாக பகிர்ந்துள்ளார். ஆனால், அவர் கூறிய அந்த அனுபவம் தற்போது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜேசன் சஞ்சய் பேட்டி

விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகியுள்ளது.

என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! | Vijay Son Jason Sanjay Has Spoken About Mom Dad

ஆக்ஷன் அட்வெஞ்சர் பாணியில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக பல்வேறு ஊடகங்களுக்கு ஜேசன் சஞ்சய் பேட்டி அளித்து வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட அனுபவங்கள் குறித்து சுவாரஸ்யமான பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

“என்னை தேடாதீர்கள்” என அம்மாவிடம் கூறிவிட்டு...

என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! | Vijay Son Jason Sanjay Has Spoken About Mom Dad

தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட ஒரு பயணம் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய், “வெளிநாட்டில் இருந்து நண்பன் ஒருவன் வந்திருந்தான். நாங்கள் நண்பர்கள் அனைவரும் அவனது வீட்டில் தங்கப்போகிறோம் என்று திட்டமிட்டிருந்தோம். சென்னையில்தான் இருப்பேன், ஆனால் என்னைத் தேடாதீர்கள் என்று எனது அம்மாவிடம் கூறிவிட்டு, கேரளா எல்லையில் உள்ள ஒரு ஊருக்கு சென்றுவிட்டோம்” என தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்கியிருந்த தனியார் இடத்திற்கு மிக அருகிலேயே புலிகள் சரணாலயம் ஒன்று இருந்ததாகவும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! | Vijay Son Jason Sanjay Has Spoken About Mom Dad

விஜய் - த்ரிஷா மீண்டும் ஹாட் டாப்பிக்: சமூக வலைதளங்களில் வைரலான முக்கிய 5 தருணங்கள்!

விஜய் - த்ரிஷா மீண்டும் ஹாட் டாப்பிக்: சமூக வலைதளங்களில் வைரலான முக்கிய 5 தருணங்கள்!

இந்த பயணத்தின் போதுதான் எதிர்பாராத விதமாக அவரது அம்மாவிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது.ஆனால், அந்த அழைப்பை சஞ்சய் எடுக்கவில்லை.

இதனால் அவருக்கு மலையாளத்தில் பிசி டோன் கேட்டுள்ளது. அதன்பிறகுதான், தான் கேரளாவுக்குச் சென்றிருப்பது தனது அம்மாவுக்கு தெரிந்துவிட்டதாக சஞ்சய் கூறியுள்ளார். இதனால் பயந்துபோன அவர், சென்னை திரும்பும் வரை செல்போனை தொடவே இல்லை என தெரிவித்துள்ளார்.

100 மீட்டர் தூரத்தில் சிறுத்தை!

இந்த பயணத்தின்போது தங்களுக்கு ஏற்பட்ட மற்றொரு அதிர்ச்சியான சம்பவத்தையும் ஜேசன் சஞ்சய் பகிர்ந்துள்ளார். “அந்த பயணத்தின்போது ஒருநாள் நாங்கள் சிறுத்தையை பார்த்தோம். எங்களிடமிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் தான் அந்த சிறுத்தை இருந்தது.

என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! | Vijay Son Jason Sanjay Has Spoken About Mom Dad

அதன்பிறகு அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டோம்” என சஞ்சய் தெரிவித்துள்ளார். தான் இதுபோன்று ஆபத்தான பயணங்களை மேற்கொள்வது தனது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், “அப்படி யோசித்துக்கொண்டே இருந்தால் இயற்கையின் அழகை ரசிக்கவே முடியாது. எனவே, நான் செய்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை” என தனது நிலைப்பாட்டையும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஜேசன் சஞ்சயிடம் அவரது முதல் சம்பளம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலும் தற்போது கவனம் பெற்றுள்ளது. வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தபோது கால்டன் சினிமாஸ் என்ற திரையரங்கில் கேசியராக பணியாற்றியதாக சஞ்சய் தெரிவித்துள்ளார்.

என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! | Vijay Son Jason Sanjay Has Spoken About Mom Dad

41 வயதிலும் இளமை மாறாத நயன்தாரா.. வெள்ளை சேலையில் அசத்தல் லுக்!

41 வயதிலும் இளமை மாறாத நயன்தாரா.. வெள்ளை சேலையில் அசத்தல் லுக்!

அந்த திரையரங்கில் மிகவும் பழைய திரைப்படங்கள் மட்டுமே திரையிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். சில நேரங்களில் திரைப்படத்தை பார்ப்பதற்காக யாருமே திரையரங்கிற்கு வரமாட்டார்கள் என்றும், அப்போது தான் மட்டும் அங்கு அமர்ந்து அந்த திரைப்படத்தை பார்க்கத் தொடங்கிவிடுவேன் என்றும் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த திரையரங்கில் பணியாற்றியது தனது வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவங்களில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 ‘சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக தனது புதிய பயணத்தை தொடங்க உள்ள ஜேசன் சஞ்சயின் இந்த அனுபவங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US