ஜெயம் ரவியை புகழ்ந்த குஷ்பு - அட இப்படி சொல்லிருக்காரே! வைரல் காணொளி
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனை குறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி இருந்தார். இதில் தற்போது குஷ்பு சம்பந்தப்படிருப்பதால் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது.

ரவி மோகன்(ஜெயம் ரவி)
ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய மனைவி ஆர்த்திக்கும் அவருடைய மாமியார் சுஜாதாக்கும் இடையில் உள்ள பிரச்சனையை மிக ஓபனாக கூறி இருந்தார்.
அத்தோடு தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு கோர்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தற்போது நிலுவையில் இருக்கும் பட்ஜத்தில் அவர் விவாகரத்து கிடைக்கும் வரையில் நடிக்க மாட்டார் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
ரவி மோகன் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் மூன்றெழுத்து இட்லி நடிகை தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துவிட்டார் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

இது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி அந்த நடிகை குஷ்பு தான் என இணையவாசிகள் ட்ரெண்டாக்கி வந்தனர். மனைவியுடன் பிரிந்ததில் இருந்து ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் நெருக்கமான உறவில் இருந்தார்.
ஆனால் ரவி மோகனின் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு முந்தைய நாள் கெனீஷா காணொளி ஒன்றை வெளியிட்டு ரவி மோகனை பிரிவதாகவும் இனிமேல் சென்னைக்கு வரமாட்டார் எனவும் சென்னையில் இருந்து கிளம்ப போவதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார். அவரது இந்த வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

'எனது வாழ்க்கையை நாசமாக்கியது ஒரு நடிகைதான். அந்த நடிகையின் பெயரை சொல்லமாட்டேன். வேண்டுமானால் இப்படி சொல்கிறேன் அவர் மூன்றெழுத்து இட்லி நடிகை.
அந்த நடிகையால் எங்களது வாழ்க்கை எல்லாம் நாசமாகியிருக்கும் என சீனியர் நடிகர்கள் மூன்று பேரே என்னிடம் கூறியிருக்கிறார்.
அந்தப் பெண்ணுக்கு என்னைப் பற்றி பேசுவதற்கு எந்த உரிமையும், அருகதையும் இல்லை' என ரவி மோகன் பேசி இருந்தார். இந்த நிலையில் குஷ்பு பேசிய காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
Look what I found. 👀 pic.twitter.com/ZXCaKcuXsf
— Deepu (@deepu_drops) May 18, 2026

வைரல் காணொளி
ரவி அப்படி பேசியதன் பின்னர் நடிகை குஷ்பூ தனது எக்ஸ் பக்கத்தில் 'தங்களது டிஎன்ஏவை நிரூபிப்பதிலேயே சிலர் மும்முரமாக இருக்கிறார்கள்.
நான் பேசியதெல்லாம் சரி என்று உணர வைத்ததற்கு நன்றி' என கூறியிருந்தார்.
இந்த நிலையில் சைமா விருது வழங்கும் விழாவில் ரவிக்கு விருது வழங்கினார் குஷ்பூ. அப்போது ரவியை அழைக்கையில், "இந்த ஹீரோவின் கண்களை பார்த்தாலே ரொமான்ஸ் வந்துவிடும்.

எந்த ஹீரோயின் அவருடன் நடித்தாலும் அதுதான் நிலைமை.
இன்னும் நான் உரிமையோடு சொல்வேன். எங்கள் வீட்டு மாப்பிள்ளை ரவி. அவரை பார்த்து ச்ச இப்படி ஒருவர் நமக்கு கிடைக்கவில்லையே என்று பெண்கள் எல்லாம் ஏங்குவார்கள்"என ஏகத்துக்கும் புகழ்ந்திருந்தார்.
இந்த காணொளி தற்போது வைரலாகி ரவி மோகன் சொன்ன இட்லி நடிகை இவர் தான் என இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |