KFC-ஸ்டைலில் சிக்கன் பாப்கான் செய்யனுமா? வெறும் 10 நிமிடம் போதும்
கேஎஃப்ஜி ஸ்டைலில் சிக்கன் பாப்கார்ன் எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிக்கன் என்றால் அனைவரும் மிகவும் பிடித்தமான உணவாகும். அசைவ பிரியர்கள் சிக்கனை பல விதங்களில் சமைத்து சாப்பிடுகின்றனர்.
இவ்வாறு விதவிதமாக சமைத்து சாப்பிட்டாலும், ஹோட்டலில் தயாரிக்கும் சிக்கன் ருசி அட்டகாசமாகவே இருக்கும். அதிலும் கேஎஃப்சி சிக்கன் என்றால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிமை என்றே கூறலாம்.
அதில் கேஎஃப்சி சிக்கன் பாப்கார்ன் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் வெறும் 10 நிமிடத்தில் குறித்த சிக்கனை எவ்வாறு சமைக்கலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கன் போர்ன்லெஸ் - அரை கிலோ
மிளகாய் தூள் - ஒன்றரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 10 கிராம்
கார்ன் ப்ளார் மாவு - 100 கிராம்
மிளகு பொடி - 1ஸ்பூன்
மைதா - 100 கிராம்
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவையான அளவு
முட்டை - 1

செய்முறை
முதலில் எலும்பு இல்லாமல் சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டி வாங்கி, அதனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்.
சிக்கனை ஒரு பாத்திரத்தில் தனியாக வைத்துக் கொள்ளவும். பௌல் ஒன்றில் இஞ்சி பூண்டு, மிளகாய் மற்றும் மிளகு பொடி,
உப்பு, முட்டை இவற்றினை சேர்த்து நன்றாக கலக்கவும்.
பின்பு கழுவி வைத்துள்ள சிக்கனை குறித்த மசால் கலவையில் போட்டு நன்றாக பிரட்டவும். மற்றொரு தட்டில் மைதா மற்றும் சோள மாவு இவற்றினை நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

மசாலாவில் சிக்கனை 30 நிமிடம் ஊற வைத்த பின்பு வெளியே வைக்கப்பட்டுள்ள மாவில் முதல்முறை பிரட்டி எடுத்து அரை மணி நேரம் வைக்கவும்.
இரண்டாவது முறையும் குறித்த மாவு கலவையில் சிக்கனை போட்டு பிரட்டி எடுக்கவும். கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சேர்த்து சிக்கனை குறைவான தீயினை வைத்து பொரித்து எடுத்தால் கேஎஃப்சி சிக்கன் பாப்கார்ன் தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |