நீரிழிவு நோயாளிகளே! ரத்த சர்க்கரை அளவு கடகடவென குறைய வேண்டுமா? இந்த ஒரு கஞ்சி போதும்
சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும் கஞ்சியைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயாளிகள் பொங்கல் மாதிரியான பண்டிகை நாளில் இனிப்பு சாப்பிடுவதற்கு அதிகமாக விரும்புவார்கள். ஆனால் அவர்களின் நோய் அவர்களுக்கு தடையாக இருக்கின்றது.
அந்த வகையில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு கஞ்சி ஒன்றினை செய்து சாப்பிடலாம். அந்த கஞ்சியை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் எந்தவொரு உணவையும் கஞ்சியாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் அவை உடனடியாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்றும் கூறுவார்கள்.
ஆனால் குறித்த கஞ்சி சர்க்கரை அளவை குறைக்கவே செய்யும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
தேவையான பொருட்கள்
ராகி - 1 டேபிள் ஸ்பூன்
பார்லி - 1 டேபிள் ஸ்பூன்
சாமை - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை
ராகி, பார்லி, சாமை இவை மூன்றையும் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவே மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
பௌல் ஒன்றில் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் இரண்டு ஸ்பூன் அளவு அரைத்து வைத்திருக்கும் பொடியைச் சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும்.

பின்பு பாத்திரம் ஒன்றில் 2 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொடுக்கவிடுங்கள். பின்பு கரைத்து வைத்திருக்கும் மாவை அதில் ஊற்றி நன்கு கைவிடாமல் கிளற வேண்டும்.
அடியில் கட்டிபிடித்து விடாத அளவிற்கு நன்றாக கிளற வேண்டும். குறித்த கலவை கஞ்சி பதத்திற்கு வெந்து வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து பருகலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |