சண்டேயை மகிழ்ச்சியாக கழிக்க வீட்டிலேயே செய்து சுவைக்கலாம் kfc சிக்கன்!
சண்டே வந்து விட்டால் வீட்டில் எல்லோரும் ஒன்று கூடி என்ன சமையல் செய்யலாம் என்று முதல்நாளோ யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
அப்படி இந்த சண்டே என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள் கடைகளில் வீட்டிலே இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.
தேவையான பொருட்கள்
- தயிர் - 1/2 கப்
- பால் - 1 கப்
- முட்டை - 1
- இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
- பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
- மிளகு தூள் – 2 தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- எலுமிச்சை சாறு – ½ பழம்
- கோழி துண்டுகள் – 8
- மைதா - 1 கப்
- சோள மாவு - 1/2 கப்
- தனியா தூள் – 1/2 தேக்கரண்டி
- சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
- பூண்டு தூள் – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் தயிர் மற்றும் பாலுடன் முட்டையை உடைத்து ஊற்றவும்.
பின்பு அதனுடன், இஞ்சி விழுது, பூண்டு விழுது, 2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மிளகு தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இப்போது அதில் கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து ஃபிரிட்ஜில் வைத்து 2 மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
பின்பு, தட்டில் மைதா, சோள மாவு, தனியா தூள், சீரக தூள், பூண்டு தூள், 1 தேக்கரண்டி மிளகு தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும்.
இதில் ஊற வைத்துள்ள கோழி துண்டுகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
இப்போது காய்ந்த எண்ணெயில் கோழி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான கேஎஃப்சி சிக்கன் தயார்.