வாவ்... 1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை ! வாய்பிளந்து பார்க்கும் ஆராய்ச்சியாளர்கள்.. எங்கு தெரியுமா?
இஸ்ரேலில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அண்மையில் யவ்னே செஸ்பிட் நகரில் அகழ்வாராய்ச்சி செய்யும் போது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோழி முட்டையை கண்டுபிடித்துள்ளனர்.
டெய்லி மெயிலில் வெளியான ஒரு அறிக்கையின்படி, பைசண்டைன் காலத்து தொழில்துறை வளாகத்திலிருந்து இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முட்டை கண்டுபிடிப்பு பற்றிய மிகவும் கவர்ச்சிகரமான பகுதி என்னவென்றால், இது ஒரு பழங்கால கழிவுநீர் தொட்டியில் மனித மலத்தால் சூழப்பட்டிருந்தது என்பதுதான்.
இந்த முட்டையின் கண்டுபிடிப்பு பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொண்ட இஸ்ரேல் பழங்கால ஆணையம் (ஐ.ஏ.ஏ), இந்த கழிவுநீர் தொட்டியில் காப்டிக் பொம்மைகள் என்று அழைக்கப்படும் இஸ்லாமிய காலத்து எலும்பு பொம்மைகளின் தொகுப்பும் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு குறித்து தனது ரியாக்சனை பகிர்ந்துகொண்ட ஐ.ஏ.ஏ தொல்பொருள் ஆய்வாளர் அல்லா நாகோர்ஸ்கி, “இன்றும் கூட, சூப்பர்மார்க்கெட் அட்டைப்பெட்டிகளில் முட்டைகள் அரிதாகவே கெட்டுப்போகாமல் இருக்கின்றன.
ஆனால் இந்த முட்டை 1,000 ஆண்டுகள் பழமையான கண்டுபிடிப்பு என்று நினைப்பது ஆச்சரியமாக இருக்கிறது!" என்று தெரிவித்துள்ளார்.
கண்டுபிடிக்கப்பட்ட முட்டை சுமார் ஆறு சென்டிமீட்டர் உயரம் கொண்டதாக இருக்கிறது. மேலும் அதன் ஓட்டில் சில விரிசல்கள் இருந்தன. பழங்கால கழிவுநீர் தொட்டியில் இருந்து முட்டை வெளியேற்றப்பட்டபோது முட்டையின் துண்டுகள் எதுவும் காணவில்லை.
இருப்பினும், காலப்போக்கில், முட்டை மிகவும் உடையக்கூடியதாக மாறிவிட்டது. தற்போது இந்த முட்டை பகுப்பாய்வுக்காக ஐ.ஏ.ஏ இன் ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது புகைப்படம் வெளியிடப்பட்டது.
பண்டைய உலகில் கோழி வளர்ப்பில் முன்னணி நிபுணரான ஐ.ஏ.ஏ-வின் லீ பாரி கால் என்பவர் இதைப் பற்றி பேசுகையில், முட்டை உள்ளே இருக்கும் கரு எதுவும் இல்லை. அது லேசாக திறந்தபோது எந்த மஞ்சள் கருவும் இல்லை என்று கூறினார்.
ஆராய்ச்சியாளர்கள் இப்போது முட்டையிலிருந்து டி.என்.ஏவைப் பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் பண்டைய பொருளைப் பற்றி மேலும் அறிய அவர்களால் ஒரு ஆய்வை மேற்கொள்ள முடியும்.
இந்த முட்டை கழிவுநீர் தொட்டிக்குள் எப்படி சென்றது என்பது தான் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் ஒரு புதிராகவே உள்ளது. இந்த கேள்விக்கான பதிலை ஒருபோதும் அறிய முடியாது என்றும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அகழ்வாராய்ச்சியின் போது முட்டையுடன் கண்டுபிடிக்கப்பட்ட மூன்று எலும்பு பொம்மைகளும் ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த காப்டிக் பொம்மைகள் முதலில் எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் தென்பட்டன.
யவ்னேயில் அகழ்வாராய்ச்சி ஒரு புதிய குடியிருப்பு திட்டத்தை உருவாக்குவதற்காக நடத்தப்பட்டு பல மாதங்களாக நடந்து வருகிறது.