கேரளா ஸ்டைல் சுவையான பலாப்பழ பாயசம்: எப்படி செய்வது?
பலாப்பழம் பொதுவாக அனைவரும் விரும்பி சாப்பிடும் பழமாகும். இது இந்தியா இலங்கை போன்ற ஆசிய நாடு உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.

பழுத்த மற்றும் பழுக்காத பழங்கள் இரண்டும் உட்கொள்ளப்படுகின்றன. பலாப்பழம் பங்களாதேஷின் தேசிய பழமாகும். இந்த பழத்தை வைத்து பல ரெசிபிகள் செய்யலாம்.
இதன் சாசனையே நம்மை எதுவாக இருந்தாலும் சாப்பிட தூண்டும். பலாப்பத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம், உணவு நார்ச்சத்து மற்றும் பிற முக்கியமான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது.
இதில் கேரளா ஸ்டைலில் பாயாசம் செய்தால் எப்படி இருக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- பலாப்பழம்,
- வெல்லம்,
- தேங்காய்,
- ஏலக்காய்,
- உலர்ந்த திராட்சை,
- முந்திரி பருப்பு

செய்முறை
பாயாசம் செய்ய முதலில் பலாப்பழத்தினை எடுத்து அதில் உள்ள விதையை தனியாக விதையை நீக்கிவிட்டு சுளையை அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் மண் சட்டி ஒன்றை வைத்து இனிப்பு தேவைக்கு ஏற்ப வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக காய்ச்சி எடுக்கவும்.
பின்னர் இதை நன்றாக வடித்து எடுத்துக்கொள்ளவும்.

பின் மண்சட்டியில் நெய் ஊற்றி தேங்காய், முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை சேர்த்து வதக்கி, அரைத்து வைத்த பலாப்பழத்தினை ஊற்றி சற்று கலக்கி விட்டு கரைத்து வைத்த வெல்லத்தினை சேர்த்து கொண்டு கொதிக்க விடவும்.
கொதித்த பின் தேங்காய் பாலை ஊற்றி இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு கொஞ்சம் ஏலக்காய் சேர்த்து எடுத்தால் பலாப்பழம், ஏலக்காய் மணம் கமள சூப்பரான கேரளா ஸ்டைல் பலாப்பழம் பாயாசம் தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |