77 வருஷமா பிரசாதம் சாப்பிட்டு கோவிலை காத்த ராட்சச முதலை! கதறி அழும் கேரள மக்கள்
கேரளா மாநிலம் காசர்கோடில் உள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பிரசாதம் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்த முதலை உயிரிழந்த தகவல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள அனந்தபுரா பத்மநாபசுவாமி கோவில் பிரசித்தி பெற்றது.
இந்த கோவில் குளத்தில் பபியா என்னும் முதலை வாழ்ந்து வந்துள்ளது.

பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு கோவிலை காத்த ராட்சச முதலை
பல ஆண்டுகளாக அந்த குளத்தில் வாழ்ந்து வரும் அந்த முதலை பக்தர்கள் தரும் பிரசாதத்தை மட்டுமே உணவாக உண்டுள்ளது.
குளத்தில் இறங்கும் பொதுமக்களையும் அது எதுவும் செய்யாமல் இருப்பது ஆச்சர்யத்தை அளித்தது.
பவ்யா முதலையை காணவே பலர் பத்மநாபசுவாமி கோவிலுக்கு வருவதும் உண்டு.
கடந்த 77 ஆண்டுகளாக அந்த கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த பவ்யா தற்போது உயிரிழந்துள்ளது.
கேரள மக்கள் இரங்கல்
இது அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவில் முதலையான பவ்யாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் பலரும் பவ்யாவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

