ஸ்டாலினைக் கொண்டாடும் கேரளா.. வெளியிட்ட காணொளியால் குஷியில் தொண்டர்கள்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பதவியேற்றது தொடங்கி பல்வேறு அதிரடி நடவடிக்கையினை காட்டி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரின் அதிகாரிகள் நியமனம், வெளிநாடுகளில் இருந்து தடுப்பூசி கொள்முதல், ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை, இரவு 11 மணிக்கு கொரோனா வார் ரூமில் ஆய்வு என மு.க.ஸ்டாலினின் பல நடவடிக்கைகள் பேசு பொருளாகி உள்ளது.
தமிழ் ஊடகங்களும் சமூக வலைதளங்களிலும் முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள் பெரும் பாராட்டு பெற்று வருகிறது.
இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள மலையாள ஊடகங்களும் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்து பல்வேறு செய்தி தொகுப்புகளை வெளியிட்டு வருகிறது.
கேரளாவில் மிகவும் பிரபலமான நியூஸ் 24 சேனல், மலையாள மனோரமா ஆகிய சேனல் களும் முதல்வரின் நடவடிக்கையை வெகுவாக பாராட்டி ஸ்டோரி வெளியிட்டுள்ளனர்.
கலைஞர் டிவி மற்றும் தமிழ் ஊடகங்களை மிஞ்சும் வகையில் ஸ்டாலினின் பிறப்பு முதல் முதல்வரானது வரை பல்வேறு தொகுப்புகளை வழங்கி வருகிறது.
கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளாவில் அம்மாநில மக்களும் பார்க்கும் வகையில் கம்யூனிசத்தையும், ரஷ்யாவில் உள்ள ஸ்டாலினையும், சினிமாத்துறையில் தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் ஆகியோருடன் ஸ்டாலினை தொடர்புப்படுத்தி செய்தி வழங்கி உள்ளனர். இந்த காணொளியை திமுகவினர் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.