திருமண சாப்பாட்டு பந்தியில் சேட்டன்கள் போட்ட ஆட்டம்! வைரலாகும் ட்ரெண்டிங் காட்சி
கேரளாவில் திருமண நிகழ்வு ஒன்றில் சமைல்காரர்கள் பந்தி பறிமாறும் இடத்தில் பாடலுக்கு ஆட்டம் போட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
திருமணம் என்றாலே ஆட்டம் பாடல் அதிகமாகவே இருக்கும். பாரம்பரிய திருமண விழாக்களில்கூட மேலதாளங்கள் முழங்க இரு குடும்பத்தாரும் இணைந்து மணமக்களை ஊர்வலமாக அழைத்து வந்து, மண விழாவை சிறப்பிப்பார்கள்.
சமீப நாட்களில் திருமணத்தில் மணப்பெண் மற்றும் மணமகன் பாடலுக்கு குத்தாட்டம் போடும் காட்சியினை அதிகமாக அவதானித்து வருகின்றோம்.
இந்நிலையில் திருமண நடன வைபத்தில் புதிய டிரெண்ட் ஒன்று உருவாகியுள்ளது. அதாவது சாப்பாடு பரிமாறும் இடத்தில் சமையல்காரர் முதல் பந்தி பறிமாறுபவர்கள் வரை என அனைவரும் பாடல் இசைத்து ஆடிப்பாடுவது டிரெண்டாகி வருகிறது.
கேரளாவில் இந்த சம்பவத்தில் சமையல்காரர்கள், பந்தி பறிமாறும் நபர்கள் என அனைவரும் காக்ஷி அம்னிபில்லா படத்தில் வரும் உய்யாரம் - பய்யாரம் என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
இதில் காமெடி என்னவென்றால், ஒருவர் வந்து சாப்பாடு பறிமாற கூறியும், அதனைக் கண்டுகொள்ளாமல் உணவு பரிமாறுபவர் நடமானடுகிறார். டிவிட்டரில் மட்டும் இந்த வீடியோ சுமார் 17 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது.
Pure bliss ? pic.twitter.com/0gmUQ3R98I
— Rohit Thayyil (@RohitThayyil) June 24, 2022