மகிழ்ச்சியாக இருந்த மணமகள்! காலால் எட்டி உதைத்த மணமகன்: ட்ரெண்டிங் காட்சி
திருமணம் என்றாலே மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லாத நிகழ்ச்சியாகவும், வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாகவும் ஒவ்வொருவரின் வாழ்வில் இருக்கின்றது.
இந்த திருமண நிகழ்ச்சிகளில் மணமக்கள் நடனமாடி அனைவரும் மகிழ்வதை அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம். ஆனால் இங்கு நடனமாட ஆசைப்பட்ட மாப்பிள்ளை மணமகளை எதிர்பாராத விதமாக காலால் உதைத்துவிடுகின்றார்.
குறித்த காட்சியில் மணமகன் மணப்பெண்ணை விட பாடலின் இசைக்கு ஏற்ப துடிப்புடன் மணமகன் ஆட, மணமகள் இருக்கை ஒன்றில் அமர்ந்து, தனது வருங்கால கணவரின் நடனத்தினை ரசித்து பார்க்கின்றார்.
புது மாப்பளையின் நடனம் கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுத்து, இறுதியல் தன் கால்களை மணப்பெண்ணின் தலைக்கு மேல் தூக்கி ஆட விரும்பிய நிலையில் அது அசம்பாவிதத்தில் முடிந்துள்ளது.
மணமகனின் கால் நேரடியாக மணப்பெண்ணின் தலையில் உதைக்க மணப்பெண் கீழே சாய்கின்றார். பின்பு மணமகன் சுதாரித்துக்கொண்டு அவரை தூக்கிவிடும் காட்சியை காணமுடிகின்றது.
Le falta un poco de agilidad pic.twitter.com/TREJBWvwsk
— Los Negros Del Ataúd ⚰ (@NegrosConAtaud) June 11, 2022